sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இத்தாலி அணிக்கு முதல் வெற்றி * வீழ்ந்தது நேபாளம்

/

இத்தாலி அணிக்கு முதல் வெற்றி * வீழ்ந்தது நேபாளம்

இத்தாலி அணிக்கு முதல் வெற்றி * வீழ்ந்தது நேபாளம்

இத்தாலி அணிக்கு முதல் வெற்றி * வீழ்ந்தது நேபாளம்


ADDED : பிப் 12, 2026 10:35 PM

Google News

ADDED : பிப் 12, 2026 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: 'டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்றது இத்தாலி. நேற்று நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை, லீக் போட்டியில் இத்தாலி, நேபாள அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இத்தாலி, பீல்டிங் தேர்வு செய்தது.

முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோற்றது நேபாளம். இதனால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

மாறாக நேபாள அணி துவக்கத்தில் இருந்து தடுமாறியது. குஷால் 5 ரன்னில் திரும்ப, ஆசிப் (20), கேப்டன் ரோகித் பவுடல் (23) ஜோடி சற்று தாக்குப் பிடித்தது. திபேந்திர சிங், 17 ரன் எடுத்தார்.

நேபாள அணி 19.3 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.கரண் (18) அவுட்டாகாமல் இருந்தார். இத்தாலி சார்பில் கிரிஷன் 3, மனென்டி 2 விக்கெட் சாய்த்தனர்.

'சூப்பர்' வெற்றி

இத்தாலி அணிக்கு ஜஸ்டின் மோஸ்கா, ஆன்டனி மோஸ்கா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இத்தாலி அணி 6 ஓவரில் 68/0 ரன் குவித்தது.

ஜஸ்டின் 37 பந்தில் அரைசதம் அடித்தார். ஆன்டனி, 28 பந்தில் அரைசதம் கடந்தார். நேபாள அணி 12.4 ஓவரில் 124/0 ரன் எடுத்து வென்றது. ஜஸ்டின் (60), ஆன்டனி (62) அவுட்டாகாமல் இருந்தனர்.






      Dinamalar
      Follow us