தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மீண்டும் அசத்த இந்தியா 'ரெடி' * நமீபியாவுடன் இன்று மோதல்

மீண்டும் அசத்த இந்தியா 'ரெடி' * நமீபியாவுடன் இன்று மோதல்

மீண்டும் அசத்த இந்தியா 'ரெடி' * நமீபியாவுடன் இன்று மோதல்


ADDED : பிப் 11, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பையில் இன்று இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. இதில் எளிதாக சாதித்து, இரண்டாவது வெற்றி பெறக் காத்திருக்கிறது இந்தியா.

இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 'ஏ' பிரிவில் இன்று நடக்கும் மோதலில் நடப்பு சாம்பியன் இந்தியா, நமீபிய அணியை எதிர்கொள்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடக்கிறது.

மும்பை, வான்கடே மைதானத்தில் தடுமாறிய இந்திய பேட்டர்கள், இன்று முழுபலத்தையும் வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். ஒருவேளை 'டாஸ்' வென்று பேட்டிங் செய்தால், இந்திய பேட்டர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையலாம்.

'கடவுளின்' வாய்ப்பு

துவக்கத்தில் இஷான் கிஷானுடன், சஞ்சு சாம்சன் களமிறங்க காத்திருக்கிறார். முதல் போட்டியில் பங்கேற்காத சாம்சனுக்கு, இன்றைய வாய்ப்பு, 'கடவுளின் வரமாக' பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

'மிடில் ஆர்டரில்' கேப்டன் சூர்யகுமார், மீண்டும் கைகொடுக்கலாம். தவிர திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஷிவம் துபே என பலர் பலம் சேர்க்கின்றனர்.

பும்ரா வருகை

பந்துவீச்சில் பும்ரா இன்று களமிறங்குகிறார். இவருடன் அர்ஷ்தீப் அல்லது சிராஜ் இடம் பெறலாம். சுழலில் வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் திறமை வெளிப்படுத்த உள்ளனர். இதனால் குல்தீப், வாஷிங்டன் வாய்ப்பு பெறுவது சந்தேகம்.

சவால் தருமா

நமீபிய அணியை பொறுத்தவரையில், இந்திய அணியுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாத வகையில் பின்தங்கி உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் எராஸ்மஸ், பிரைலின்க், ஜான் நிகோல் ஆறுதல் தந்தாலும், பவுலிங் பலவீனமாக உள்ளது.

பயிற்சி போட்டியில் மூன்றாம் தர இந்திய 'ஏ' அணிக்கு எதிராக, 67 ரன்னுக்கு சுருண்டது. தரவரிசையில் 15வது இடத்திலுள்ள நமீபிய அணி, 'நம்பர்-1' இந்தியாவுக்கு எதிராக என்ன செய்யப் போகிறது என இன்று காணலாம்.

அபிஷேக் 'டிஸ்சார்ஜ்'

இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், வயிற்று பிரச்னை காரணமாக பீல்டிங் செய்யவில்லை. காம்பிர் வீட்டு விருந்துக்கு சென்ற போதும், பாதியில் கிளம்பிவிட்டார்.

தற்போது டில்லியில் உள்ள மருத்துவமனையில் 'அட்மிட்' செய்யப்பட்டார். நேற்று இவர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். எனினும் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக (பிப். 15) களமிறங்க, தயாராவார்.

'ரப்பர்' பேட்

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 3 வது 'டி-20' போட்டியில் அபிஷேக் 20 பந்தில் 68 ரன், சூர்யகுமார் 26 பந்தில் 57 ரன் விளாசினர். போட்டி முடிந்ததும், அபிஷேக் சர்மா பேட்டினை வாங்கி, நியூசிலாந்து வீரர்கள் வியப்பாக பார்த்தனர்.

இதனிடையே, இலங்கை அணி வீரர் ராஜபக்ச கூறுகையில்,'' இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தும் பேட் சிறப்பானது. இதன் மேற்புறம் 'ரப்பர்' கொண்டு மூடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இந்த பேட்டுகள் மற்ற அணி வீரர்களுக்கு கிடைக்காது. அவர்களால் வாங்க முடியாது,'' என தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சை கிளப்பியது.

திடீர் பல்டி

தற்போது ராஜபக்ச கூறுகையில்,'' இந்திய கிரிக்கெட் 'சிஸ்டம்', கட்டமைப்பு வியக்கத்தக்க முறையில் நவீனமாகி விட்டது. அவர்களுக்கு பேட் தயாரிக்கும் நிறுவனம் உலகின் சிறந்ததாக உள்ளது என்று தான் தெரிவித்தேன். மாறாக எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us