sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

நமீபியாவை வென்றது நெதர்லாந்து

/

நமீபியாவை வென்றது நெதர்லாந்து

நமீபியாவை வென்றது நெதர்லாந்து

நமீபியாவை வென்றது நெதர்லாந்து


ADDED : பிப் 10, 2026 09:53 PM

Google News

ADDED : பிப் 10, 2026 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.

டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

நிகோல் ஆறுதல்

நமீபிய அணிக்கு ஸ்டீன்கேம்ப் (6), பிரைலிங்க் ஜோடி துவக்கம் கொடுத்தது. பிரைலிங்க் 30 ரன் எடுத்து, வான் பீக் பந்தில் அவுட்டானார். கேப்டன் எராஸ்மஸ் (18) நிலைக்கவில்லை. ஜான் நிகோல் 38 பந்தில் 42 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். அடுத்து வந்த ஸ்மிட், 22 ரன் எடுத்தார். நமீபிய அணி 20 ஓவரில் 156/8 ரன் மட்டும் எடுத்தது.

லீடு விளாசல்

பின் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் (28), மேக்ஸ் ஓ தவுத் (7) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அடுத்து பாஸ் டி லீடு, ஆக்கர்மென் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆக்கர்மென், 32 ரன்னில் அவுட்டானார். லீடு அரைசதம் கடக்க, வெற்றி எளிதானது.

நெதர்லாந்து அணி 18 ஓவரில் 159/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. லீடு (72 ரன், 48 பந்து), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆலோசகர் கிறிஸ்டன்

தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் 58. இவரது பயிற்சியில் இந்திய அணி, 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்று அனுபவம் கொண்ட கிறிஸ்டன், தற்போது 'டி-20' உலக தொடரில் நமீபிய அணி ஆலோசகராக வந்துள்ளார்.






      Dinamalar
      Follow us