sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்

/

ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்

ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்

ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்


ADDED : பிப் 07, 2026 11:16 PM

Google News

ADDED : பிப் 07, 2026 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி, 35 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஸ்காட்லாந்து பீல்டிங் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (35), கேப்டன் ஹோப் (19) ஜோடி துவக்கம் தந்தது. பாவெல் (24) அவுட்டாக, ஹெட்மயர் (64 ரன்) 22 பந்தில் அரைசதம் அடித்தார். ரூதர்போர்டு 26 ரன் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 182/5 ரன் எடுத்தது.

ஷெப்பர்டு அபாரம்

ஸ்காட்லாந்து அணிக்கு முன்சே (19), மைக்கேல் (1) ஜோடி துவக்கம் தந்தது. மெக்முல்லன் (14) கைவிட, கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 42 ரன் எடுத்தார்.

17 வது ஓவரை வீசிய ரோமாரியோ ஷெப்பர்டு, 2, 3வது பந்தில் மாத்யூ (11), கிராஸ் (0) என இருவரை அவுட்டாக்கினார். அடுத்த பந்தில் ஆலிவரை (0) வெளியேற்றி, இத்தொடரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்து அசத்தினார்.

தொடர்ந்து கடைசி பந்தில் (6) ஷரிப்பை (0) வீழ்த்திய இவர், 5 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார். ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 147 ரன்னில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்னில் வென்றது. ஷெப்பர்டு 5 விக்கெட் சாய்த்தார்.

முதல் வீரர்

'டி-20' உலக கோப்பை அரங்கில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெப்பர்டு. 'டி-20' உலக கோப்பையில் பதிவான 10வது 'ஹாட்ரிக்' இது ஆனது.

* கம்மின்ஸ் 2 முறை (2024, ஆஸி.,), பிரட் லீ (2007, ஆஸி.,), கேம்பெர் (2021, அயர்லாந்து), ஹசரங்கா (2021, இலங்கை), ரபாடா (2021, தெ.ஆப்.,), கார்த்திக் (2022, எமிரேட்ஸ்), ஜோஷ் லிட்டில் (2022, அயர்லாந்து), ஜோர்டானுக்கு (2024, இங்கிலாந்து) அடுத்து இதுபோல சாதித்த 9வது பவுலர் ஆனார் ஷெப்பர்டு (2026).

22 பந்து

'டி-20' உலக கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் ஹெட்மயர் (22 பந்து). முன்னதாக கெய்ல், 23 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்

நெதர்லாந்தை வென்றது பாக்.,

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.

இலங்கையின் கொழும்புவில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.

நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் (24), மோக் ஓ தவுத் (5) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஆக்கர்மான் 20 ரன்னில் அவுட்டாக, பாஸ் டி லீடு 30 ரன் எடுத்து திரும்பினார். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (37) உதவினார். ஒருகட்டத்தில் 127/4 என இருந்த நெதர்லாந்து அணியை, அடுத்து வந்த பேட்டர்கள் கைவிட்டனர். கடைசி 20 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து, 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

திணறல் வெற்றி

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பர்கான், சைம் அயுப் (24) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் சல்மான் அகா (12), பாபர் ஆசம் (15), ஏமாற்றினர். பின் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். 11.2 ஓவரில் 98/2 என இருந்த பாகிஸ்தான், 16.1 ஓவரில் 114/7 என ஆனது. கடைசி 23 பந்தில் 34 ரன் தேவைப்பட்டன. பகீம் அஷ்ரப் (11 பந்து, 29 * ரன்) கைகொடுக்க, 19.3 ஓவரில் 148/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us