தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கேரளாவில் கெய்ல் 'புயல்'

கேரளாவில் கெய்ல் 'புயல்'

கேரளாவில் கெய்ல் 'புயல்'


ADDED : ஆக 31, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் 'ஜாம்பவான்' கிறிஸ் கெய்ல் 46. 'யுனிவர்சல் பாஸ்' என செல்லமாக அழைக்கப்படும் இவர், கேரள அணியின் 'சக உரிமையாளர்' என புது அவதாரம் எடுத்துள்ளார்.

கேரளாவில் நடக்கும் உள்ளூர் 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சஞ்சு சாம்சன் சகோதரர் சாலி சாம்சன் கேப்டனாக உள்ள கொச்சி புளூ டைகர்ஸ் அணியில் சக உரிமையாளர், ஆலோசகராக கெய்ல் உள்ளார். கேரளா வந்த கெய்ல், கொச்சி அணியுடன் இணைந்து, வீரர்களுக்கு தேவையான 'அட்வைஸ்' வழங்கினார். திருவனந்தபுரம் மைதானத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பந்து வீச, கெய்ல் சிக்சராக விளாசினார்.

கெய்ல் கூறுகையில்,'' எனது அனுபவங்களை வீரர்களுடன் பகிர்ந்து கொண்டு, கொச்சி அணியை சிறந்ததாக மாற்ற உதவுவேன். இளம் வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதிக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us