/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மந்தனா சதம்: இந்தியா அபாரம் * கோப்பை வென்று அசத்தல்
/
மந்தனா சதம்: இந்தியா அபாரம் * கோப்பை வென்று அசத்தல்
மந்தனா சதம்: இந்தியா அபாரம் * கோப்பை வென்று அசத்தல்
மந்தனா சதம்: இந்தியா அபாரம் * கோப்பை வென்று அசத்தல்
ADDED : அக் 29, 2024 11:28 PM

ஆமதாபாத்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா வந்த நியூசிலாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, 1-1 என தொடர் சமனில் இருந்தது. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று ஆமாதாபாத்தில் நடந்தது.
'டாஸ்' வென்று 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு ஜார்ஜியா (39), இசபெல்லா (25) கைகொடுத்தனர். புரூகே 86 ரன் விளாசினார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 49.5 ஓவரில் 232 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் தீப்தி சர்மா 3, பிரியா 2 விக்கெட் கைப்பற்றினர்.
மந்தனா அபாரம்
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி (12) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. யஸ்திகா 35 ரன் எடுத்து அவுட்டானார். பின் மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து வேகமாக ரன் சேர்க்க, இந்தியா வெற்றியை நெருங்கியது. மந்தனா சதம் எட்டினார். 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது, மந்தனா (100) அவுட்டானார். ஹர்மன்பிரீத் கவுர் (70*) ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 44.2 ஓவரில் 236/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 2-1 என தொடரை கைப்பற்றியது.
முதலிடம்
இந்திய பெண்கள் ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீராங்கனை பட்டியலில் முதலிடம் பெற்றார் மந்தனா. 88 போட்டியில் 8 சதம் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் மிதாலி ராஜ் (232 போட்டியில் 7 சதம்) உள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் (116ல் 6) அடுத்து உள்ளார்.