தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அபிஷேக் சர்மாவின் 'கமாண்டோ' பயிற்சி * 'சிக்சர்' விளாசும் பின்னணி

அபிஷேக் சர்மாவின் 'கமாண்டோ' பயிற்சி * 'சிக்சர்' விளாசும் பின்னணி

அபிஷேக் சர்மாவின் 'கமாண்டோ' பயிற்சி * 'சிக்சர்' விளாசும் பின்னணி


ADDED : பிப் 03, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய அணியின் விளாசல் வீரனாக உருவெடுத்துள்ளார் அபிஷேக் சர்மா. அஞ்சாமல் சிக்சர் அடிக்கும் இவர், 'டி-20 'உலக கோப்பை தொடரில் முத்திரை பதிக்க காத்திருக்கிறார்.

இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் (பிப். 7-மார்ச் 8) நடக்க உள்ளது. இதில் 'நடப்பு சாம்பியனாக' களமிறங்கும் இந்திய அணி, மீண்டும் உலக கோப்பை வென்று வரலாறு படைக்கும் உறுதியுடன் உள்ளது.

14 பந்தில் அரைசதம்

துவக்க பேட்டர் அபிஷேக் சர்மா, 25, மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வெஸ்ட் இண்டீசின் கெய்ல் போல 'பவர்புல் ஷாட்' அடிக்கிறார். இதனால் எதிரணி பவுலர்கள் வீசும் பந்துகள் சிக்சருக்கு பறக்கின்றன. 2025ல் ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் 314 ரன் (7 இன்னிங்ஸ்) விளாசிய இவர், இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது 'டி-20' போட்டியில் 14 பந்தில் அரைசதம் அடித்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் சர்மாவுக்கு, 'குரு' யுவராஜ் சிங் தான். இவரை போல சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளார். 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல யுவராஜ் கைகொடுத்தார். இதே போல இம்முறை அபிஷேக் சர்மா 'டி-20' உலக கோப்பை வெல்ல உதவலாம்.

கடின பயற்சி

இது பற்றி அபிஷேக் தந்தை ராஜ்குமார் சர்மா கூறுகையில்,''ராணுவ கமாண்டோ வீரரை போன்று கடின பயிற்சிகளை அபிஷேக் சர்மா மேற்கொண்டார். இளம் வயதில் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பார். குளிர்ந்த நீச்சல் குளத்தில் சிறிது நேரம் நீந்துவார். பின் 'ஜிம்' சென்று கடின எடை துாக்கி பயிற்சி செய்வார். தியானம் முடித்து, கிரிக்கெட் மைதானம் செல்வார். அங்கு வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடிப்பார். மனதளவிலும் உடல் அளவிலும் வலிமையாக இருப்பதால் தான் துணிச்சலாக 'சிக்சர்' அடிக்கிறார்,''என்றார்.

வெற்றி நாயகன்

இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறுகையில்,''அதிரடியாக ஆடும் பேட்டர்கள் தொடர்ந்து ரன் குவிக்க தடுமாறுவர். கெய்ல் கூட தனக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்தில் 'செட்டில்' ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால், அபிஷேக் சர்மா எந்த களத்திலும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுகிறார். 12-14 பந்துகளில் 60-70 ரன் எடுக்கிறார். இதனால் 'மேட்ச் வின்னராக' ஜொலிக்கிறார். இவர் துவக்கத்தில் விளாசினால், இந்தியாவின் வெற்றி எளிதாகிறது. 'டி-20' உலக கோப்பை தொடரிலும் இவரது வாணவேடிக்கையை எதிர்பார்க்கலாம்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us