தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அபிஷேக் தேறுவது எப்படி * கவாஸ்கர் 'அட்வைஸ்'

அபிஷேக் தேறுவது எப்படி * கவாஸ்கர் 'அட்வைஸ்'

அபிஷேக் தேறுவது எப்படி * கவாஸ்கர் 'அட்வைஸ்'


ADDED : பிப் 19, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: ''அபிஷேக் சர்மா போட்டியை 'ஸ்மார்ட்' ஆக துவக்க வேண்டும். முதல் பந்தில் இருந்து பவுண்டரி, சிக்சர் அடிக்க வேண்டும் என முயற்சி செய்யக் கூடாது,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. 'டி-20' அரங்கில் உலகின் 'நம்பர்-1' பேட்டர். துவக்கத்தில் மின்னல் வேக ரன்குவிப்பை வெளிப்படுத்தும் இவர், கடைசியாக களமிறங்கிய 7 போட்டியில் 5 முறை (0, 68, 0, 30, 0, 0, 0) 'டக்' அவுட்டானார். நடப்பு உலக கோப்பை தொடரின் மூன்று போட்டியிலும் 'டக்' அவுட்டான சோகத்தில் உள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் 76, கூறியது:

அபிஷேக் சர்மா சிறந்த வீரர். ஆனால் அதிகப்படியான எதிர்பார்ப்பு காரணமாக, ஒருவிதமான அழுத்தத்தில் உள்ளார். ஒருவேளை அமெரிக்க அணிக்கு எதிராக களமிறங்கி, சிறப்பான துவக்கம் தந்திருந்தால், அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தல் தொடர்ந்து இருக்கும். தற்போது 'நம்பர்-1' வீரர், இமாலய 'சிக்சர்' விளாசுபவர் என்ற நெருக்கடியும் சேர்ந்து கொள்ள, தடுமாறுகிறார்.

இதில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும். போட்டியின் முதல் பந்தில் இருந்து, சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என முயற்சி செய்யக் கூடாது. சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, பின் சூழலுக்கு ஏற்ப விளையாடலாம்.

போட்டியை 'ஸ்மார்ட்' ஆக துவக்க வேண்டும். முதலில் ஒரு ரன் எடுத்து விட வேண்டும். 4 பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், பரவாயில்லை. பிறகு அதனை சரி செய்து விடலாம். இதன் பின், பவுண்டரி, சிக்சர் என அடிக்கத் துவங்கி விட்டால் பிறகு பேட்டிங் எளிதாகும். ஆனால், வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்பதற்காக, வரம்பு மீறி, தேவையற்ற 'ஷாட்' அடிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us