தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி அறிவிப்பு * ஆஸி., டெஸ்ட் தொடருக்காக...

இந்திய அணி அறிவிப்பு * ஆஸி., டெஸ்ட் தொடருக்காக...

இந்திய அணி அறிவிப்பு * ஆஸி., டெஸ்ட் தொடருக்காக...


UPDATED : அக் 26, 2024 04:10 PM

ADDED : அக் 25, 2024 11:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2024 04:10 PM ADDED : அக் 25, 2024 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அபிமன்யு ஈஸ்வரன், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் அறிமுக வாய்ப்பு பெற்றனர்.

ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.

இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பும்ரா துணைக் கேப்டனாக நீடிக்கிறார். கணுக்கால் (ஆப்பரேஷன்) காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இடது தொடைப்பகுதி வலியால் அவதிப்படும் 'சுழல்' குல்தீப் யாதவ், அணியில் சேர்க்கப்படவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரு டெஸ்டில் ரோகித் பங்கேற்க மாட்டார். இவருக்குப் பதில் அபிமன்யு ஈஸ்வரன் அறிமுக வாய்ப்பு பெறலாம். தவிர 9 முதல் தர போட்டியில் மட்டும் பங்கேற்ற ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் என புதுமுகங்கள் சேர்க்கப்பட்டனர். அஷ்வின், ஜடேஜா, வாஷிங்டன் என மூன்று சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள், 'வேகத்தில்' பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா இடம் பிடித்தனர்.

அணி விபரம்:

ரோகித் சர்மா, பும்ரா, ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், கோலி, ராகுல், ரிஷாப் பன்ட், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், அஷ்வின், ஜடேஜா, வாஷிங்டன், சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார்.

ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us