தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய பவுலர்கள் திணறல் * இலங்கை லெவன் 363 ரன் குவிப்பு

இந்திய பவுலர்கள் திணறல் * இலங்கை லெவன் 363 ரன் குவிப்பு

இந்திய பவுலர்கள் திணறல் * இலங்கை லெவன் 363 ரன் குவிப்பு


ADDED : ஆக 07, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: பயிற்சி போட்டியில் இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக. 15ல் காலேயில் துவங்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்தியா, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) லெவன் மோதும் மூன்று நாள் பயிற்சி போட்டி, கொழும்பு, என்.சி.சி., மைதானத்தில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற இலங்கை லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நல்ல துவக்கம்

இலங்கை லெவன் அணிக்கு நிசான் பெர்னாண்டோ, ரவிந்து ரசாந்தா நல்ல துவக்கம் கொடுத்தது. நிசான், 52 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது, நிசான் (66) அவுட்டானார். 40 ஓவரில் இலங்கை லெவன் அணி, 170/1 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

பின் இந்திய பவுலர்கள் சற்ற நம்பிக்கை தந்தனர். ஜடேஜா சுழலில் பசிந்து (35) சிக்கினார். மானவ் சுதார் பந்தில், விப்ராஜிடம் கேட்ச் கொடுத்து, ரவிந்து (71) வெளியேறினார். பவன் 39, அஹான் 31 ரன் எடுத்தனர். குல்தீப் சுழலில் அஞ்சலா (13) சிக்கினார்.

கேப்டன் சோனல் தினுஷா (52) அரைசதம் அடித்த நிலையில், மானவ் பந்தில் வீழ்ந்தார். ரமேஷ் மெண்டிசை (32) நிலைக்கவில்லை.

முதல் நாள் முடிவில் 90 ஓவரில், இலங்கை லெவன் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 363 ரன் குவித்தது. கேஷரா (9), சுதீரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா, மானவ், குல்தீப் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.



அனுமதி இலவசம்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரு டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி தரப்பட்டுள்ளது. 'உலகத் தரமான டெஸ்ட் போட்டிகளை, இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலாம்... மைதானத்திற்கு வாங்க,' என இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

கேப்டன் ராகுல்

பயிற்சியின் போது, குர்னுார் பிரார் வீசிய பந்து இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. இதனால் நேற்று துவங்கிய பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை ராகுல் ஏற்றார்.

கேப்டன் ராகுல்

பயிற்சியின் போது, குர்னுார் பிரார் வீசிய பந்து இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. இதனால் நேற்று துவங்கிய பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை ராகுல் ஏற்றார்.

போட்டி எப்படி

மூன்று நாள் போட்டியில், முதல் இரு நாளில் ஒவ்வொரு அணியும் தலா 90 ஓவர்கள் பேட்டிங் செய்யும். இதன் படி இன்று இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது. 3வது நாளில் இரு அணிகளும் தலா 45 ஓவர்கள் பேட்டிங் செய்யும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us