ADDED : ஆக 08, 2026 09:08 PM

புதுடில்லி: காயம் காரணமாக இந்திய வீராங்கனை ஜெமிமா, ஆசிய கோப்பையில் விளையாடுவது சந்தேகம்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடர் (ஆக. 28 - செப். 13) நடக்கவுள்ளது. இந்திய அணி 'ஏ' பிரிவில் தாய்லாந்து (ஆக. 30), ஹாங்காங் (செப். 3), பாகிஸ்தான் (செப். 5) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில், 'மிடில் ஆர்டர் பேட்டர்' ஜெமிமா ரோட்ரிக்ஸ் 25, இடம் பெற்றிருந்தார்.
இங்கிலாந்தில் நடக்கும் 'தி ஹன்ட்ரெட்' தொடரில், 'சதர்ன் பிரேவ்' அணிக்காக விளையாடிய போது தொடையின் பின்பகுதியில் காயம் அடைந்தார் ஜெமிமா. உடனடியாக இத்தொடரில் இருந்து விலகிய இவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' சார்லி நாட் சேர்க்கப்பட்டார். ஜெமிமாவின் காயம் குணமடைய மூன்று வாரம் தேவைப்படும் என்பதால் ஆசிய கோப்பையில் விளையாடுவது சந்தேகம். ஒருவேளை தாய்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன், உடற்தகுதியை நிரூபித்தால் ஆசிய கோப்பையில் ஜெமிமா விளையாடலாம்.
