/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மெக்ஸ்வீனி, இங்லிஸ் வாய்ப்பு * ஆஸி., அணி அறிவிப்பு
/
மெக்ஸ்வீனி, இங்லிஸ் வாய்ப்பு * ஆஸி., அணி அறிவிப்பு
மெக்ஸ்வீனி, இங்லிஸ் வாய்ப்பு * ஆஸி., அணி அறிவிப்பு
மெக்ஸ்வீனி, இங்லிஸ் வாய்ப்பு * ஆஸி., அணி அறிவிப்பு
UPDATED : நவ 11, 2024 12:24 AM
ADDED : நவ 09, 2024 11:15 PM

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீரர்களாக நேதன் மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்- -கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22ல் துவங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் பேட்டர் நேதன் மெக்ஸ்வீனி வாய்ப்பு பெற்றுள்ளார். உஸ்மான் கவாஜா உடன் துவக்க வீரராக களமிறங்குவார். மெக்ஸ்வீனி, 34 முதல் தர போட்டிகளில் 2252 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி உள்ளார். கூடுதல் கீப்பராக ஜோஷ் இங்லிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவ ஸ்டீவ் ஸ்மித் இருப்பது பலம்.
'வேகத்தில்' மிரட்ட கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட், ஸ்காட் போலண்ட் உள்ளனர். 'ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக' லியான் உள்ளார்.
தகுதியான வீரர்
ஆஸ்திரேலிய தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில்,''கடந்த 12-15 மாதமாக மெக்ஸ்வீனி சிறப்பாக செயல்படுகிறார். உள்ளூர் ஷெபீல்டு ஷீல்டு தொடர், இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக அசத்தினார். டெஸ்ட் போட்டிக்கு பொருத்தமான வீரர். இங்லிஸ் ஆட்டமும் வியக்க வைக்கிறது. டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியான வீரர்,''என்றார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, லபுசேன், லியான், மிட்சல் மார்ஷ், நேதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், ஸ்டார்க்.