/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் எதிர்ப்பு * 'டிரா' செய்ய வற்புறுத்தியது சரியா
/
இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் எதிர்ப்பு * 'டிரா' செய்ய வற்புறுத்தியது சரியா
இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் எதிர்ப்பு * 'டிரா' செய்ய வற்புறுத்தியது சரியா
இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் எதிர்ப்பு * 'டிரா' செய்ய வற்புறுத்தியது சரியா
ADDED : ஜூலை 28, 2025 11:20 PM

புதுடில்லி: மான்செஸ்டர் டெஸ்டில் ஜடேஜா, வாஷிங்டன் சதத்தை நெருங்கிய நிலையில், போட்டியை 'டிரா' செய்ய வலியுறுத்திய இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358, இங்கிலாந்து 669 ரன் எடுத்தன. 311 ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்தியா. ராகுல் (90), சுப்மன் (102) உதவினர். அடுத்து வந்த ஜடேஜா, வாஷிங்டன் இணைந்து தோல்வியை தவிர்க்க போராடினர்.
ஒரு கட்டத்தில் ஜடேஜா 89, வாஷிங்டன் 80 ரன் எடுத்திருந்தனர். போட்டி முடிய ஒரு மணி நேரம் மட்டும் உள்ள நிலையில் 15 ஓவர்கள் மட்டும் மீதம் இருந்தன. இந்திய அணி 75 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
இதனால் போட்டியை 'டிரா' செய்ய முன் வந்தார் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ். இதை ஏற்க மறுத்தது இந்தியா. தொடர்ந்து ஜடேஜா, வாஷிங்டன் என இருவரும் சதம் அடித்த பின் (இந்தியா 425/4), 'டிரா' செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியது:
நாள் முழுவதும் நமது பவுலர்கள் பந்துவீச, அவர்கள் பேட்டிங் செய்தனர். நமது வீரர்கள் சதத்தை நெருங்கிய போது, 'டிரா' செய்யலாமா என்றால் எப்படி ஏற்பது. இரண்டாம் தர மனநிலை என்பது இது தான்.
கடைசி நாள் காலையில் இருந்து இந்திய பேட்டர்கள், எதிரணி பவுலர்களை சமாளித்து போட்டியை 'டிராவுக்கு' கொண்டு செல்ல கடினமாக போராடினர். அவர்கள் சதம் அடித்து விட்டுப் போகட்டுமே.
ஒருவேளை இந்திய அணி கேப்டனாக நான் இருந்திருந்தால், மீதமுள்ள 15 ஓவர்களும் பேட்டிங் செய்திருப்பேன். ஹாரி புரூக் பந்தில் தான் நீங்கள் சதம் அடிக்கப் போகிறீர்களா என ஜடேஜாவை பார்த்து கேட்கிறார் ஸ்டோக்ஸ். நீங்கள் ஹார்மிசன், பிளின்டாப் என யாரை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள், எங்களுக்கு கவலை இல்லை. அது உங்கள் பிரச்னை. இந்த சதம், ஜடேஜா, வாஷிங்டனுக்கு பரிசாக வந்து விடவில்லை. இதற்கு அவர்கள் இருவரும் தகுதியானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அஷ்வின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மோசமான செயல்
இங்கிலாந்த அணி முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில்,'' இந்திய அணியின் இரு பேட்டர்கள் கடினமாக போராடி 89, 80 என ரன் எடுத்துள்ளனர். அவர்கள் சதம் அடிக்கத் தான் விரும்புவர். ஆனால், புருக்கை பந்துவீசச் செய்து, ஸ்டோக்ஸ் மோசமாக நடந்து கொண்டார்,'' என்றார்.
இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறுகையில்,'' இந்திய அணி வீரர்கள் இருவரும் பேட்டிங்கை தொடர்ந்தது சரியான முடிவு தான். 140 ஓவர்கள் பந்து வீசியும் பலன் இல்லை என்பதால் இங்கிலாந்து அணியினர் ஏமாற்றம் அடைந்தனர்,'' என்றார்.
ஓவர்டன் வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கூடுதலாக 'ஆல் ரவுண்டர்' ஓவர்டன் சேர்க்கப்பட்டு, 15 பேர் இடம் பெற்றனர்.
அணி விபரம்: ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஆர்ச்சர், அட்கின்சன், பெத்தெல், ஹாரி புரூக், கார்ஸ், கிராலே, டாசன், டக்கெட், ஓவர்டன், போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், டங்க், வோக்ஸ்.