/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணியில் இரண்டு மாற்றம்... * கவாஸ்கர் கணிப்பு
/
இந்திய அணியில் இரண்டு மாற்றம்... * கவாஸ்கர் கணிப்பு
இந்திய அணியில் இரண்டு மாற்றம்... * கவாஸ்கர் கணிப்பு
இந்திய அணியில் இரண்டு மாற்றம்... * கவாஸ்கர் கணிப்பு
ADDED : ஜூலை 08, 2025 11:36 PM

லார்ட்ஸ்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெல்ல, தொடர் 1-1 என சமனில் உள்ளது.
தேர்வு குழப்பம்
மூன்றாவது டெஸ்ட் நாளை லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கான இந்திய 'லெவன்' அணியை தேர்வு செய்வது கடினமான காரியம். கடந்த போட்டியில் பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட, ஆகாஷ் தீப் வாய்ப்பு பெற்றார். 'வேகத்தில்' மிரட்டிய ஆகாஷ், 10 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு கைகொடுத்தார். இதனால் இவரை நீக்க முடியாது. லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா மீண்டும் இடம் பெறுவது உறுதி என கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற குழப்பத்தில் இந்திய அணி உள்ளது.
குல்தீப் வாய்ப்பு
இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''இரண்டாவது டெஸ்டில் சிராஜ் (7), ஆகாஷ் தீப் (10) சேர்ந்து 17 விக்கெட் வீழ்த்தினர். இவர்களுக்கு வாய்ப்பு மறுக்க முடியாது. பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கினார். இவரை நீக்கிவிட்டு பும்ராவை மீண்டும் சேர்க்கலாம். நிதிஷ் குமார் பெரிதாக சோபிக்கவில்லை. இவருக்கு பதில் மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம். இதனால் பந்துவீச்சு பலம் பெறும்,''என்றார்.
பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தோற்ற இங்கிலாந்து அணியிலும் மாற்றங்கள் செய்யப்படலாம். ஜோஷ் டங், 'ஸ்பின்னர்' சோயப் பஷிர் நீக்கப்பட்டு, அனுபவ 'வேகப்புயல்' ஜோப்ரா ஆர்ச்சர், அட்கின்சன் இடம் பெறலாம்.
கிராவ்லி வீண்
இது பற்றி இங்கிலாந்து ஜாம்பவான் ஜெப்ரி பாய்காட் கூறுகையில்,''கிறிஸ் வோக்ஸ், ஜாக் கிராவ்லி அணிக்கு சுமையாக உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தால், எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. வோக்ஸ் பந்துவீசும் வேகம் குறைந்துவிட்டது. இவரது பணி விக்கெட் வீழ்த்துவது தான். ரன் சேர்க்க பேட்டர்கள் உள்ளனர். ஆண்டர்சன் போல நுணுக்கமாக பந்துவீசும் திறன் இவரிடம் இல்லை. இதே போல கிராவ்லி தொடர்ந்து தடுமாறுகிறார். எந்த பந்தை அடிக்க வேண்டும்; எந்த பந்தை தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படை பேட்டிங் ஞானம் கூட இவரிடம் காணப்படவில்லை,'' என்றார்.
பயிற்சி ஆரம்பம்
லார்ட்ஸ் போட்டிக்கான பயிற்சியை இந்திய வீரர்கள் நேற்று துவக்கினர். பவுலிங், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார் பும்ரா. இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும், ஒரு மணி நேரம் பந்துவீசினார். இதுவரை 72.3 ஓவர் (2 டெஸ்ட்) வீசிய முகமது சிராஜுக்கு, ஓய்வு கொடுத்தால், அர்ஷ்தீப் இடம் பெறலாம்.
இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில்,'' பும்ரா மட்டுமல்ல, ஒவ்வொரு பவுலரின் உடற்தகுதியும் வெவ்வேறாக இருக்கும். 3-4 வது டெஸ்டுக்கு இடையில் போதிய ஓய்வு உள்ளது. சிராஜ் அதிக ஓவர் வீசியுள்ளார். அவரையும் தொடர்ந்து கண்காணிப்போம்,'' என்றார்.
ஆடுகளம் எப்படி
லார்ட்ஸ் ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். இரு 'சுழல்', 'மூன்று' வேகம் என இந்திய பவுலிங் கூட்டணியில் மாற்றம் வரலாம்.
மீண்டும் மிரட்டுவார்
இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறுகையில்,'' இரண்டாவது டெஸ்டில் பும்ரா இல்லாமல் இந்திய அணி, எப்படி இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் என விமர்சித்தனர். ஆனால் 'பிளாட் பிட்ச்சில்' சாதித்துக் காட்டினர். லார்ட்சில் ஏற்கனவே பும்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருவார ஓய்வுக்குப் பின் மீண்டும் களமிறங்க உள்ள இவர், லார்ட்சில் மீண்டும் சாதிக்கலாம்,'' என்றார்.