/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டர்பனில் இந்திய அணி * 'டி-20' தொடருக்கு தயார்
/
டர்பனில் இந்திய அணி * 'டி-20' தொடருக்கு தயார்
ADDED : நவ 04, 2024 10:57 PM

டர்பன்: 'டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா சென்றது.
தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி நான்கு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் பங்கேற்கும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியினர், நேற்று தென் ஆப்ரிக்காவின் டர்பன் சென்று சேர்ந்தனர்.
இங்குள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில், முதல் 'டி-20' போட்டி நவ. 8ல் நடக்க உள்ளது. அடுத்து ஜிகுபெர்ஹா (10), செஞ்சுரியன் (13), ஜோகனஸ்பர்க் (15) என நான்கு மைதானங்களில் போட்டி நடக்க உள்ளன.
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறார். தென் ஆப்ரிக்க தொடரில் தற்காலிக பயிற்சியாளராக லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர இந்திய அணியில் அபிஷேக், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், சுழலில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.