sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இளம் இந்தியா 'ஹாட்ரிக்' * யூத் உலக கோப்பையில்...

/

இளம் இந்தியா 'ஹாட்ரிக்' * யூத் உலக கோப்பையில்...

இளம் இந்தியா 'ஹாட்ரிக்' * யூத் உலக கோப்பையில்...

இளம் இந்தியா 'ஹாட்ரிக்' * யூத் உலக கோப்பையில்...


ADDED : ஜன 24, 2026 11:03 PM

Google News

ADDED : ஜன 24, 2026 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புலவாயோ: யூத் உலக கோப்பை தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது இந்தியா. நேற்று நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டில் வீழ்த்தியது.

ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 16வது சீசன் நடக்கிறது.

இந்திய அணி, தனது மூன்றாவது, கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற இந்தியா பீல்டிங் செய்தது.

நியூசிலாந்து துவக்கத்தில் 17/3 என திணறியது. மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. பின் 37 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் 135 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியாவின் அம்ப்ரிஸ் 4 (தமிழகம்), ஹெனில் 3 விக்கெட் சாய்த்தனர்.

'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 37 ஓவரில் 130 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. இந்திய அணிக்கு வைபவ் (40), கேப்டன் ஆயுஷ் மாத்ரே (53) கைகொடுக்க, 13.3 ஓவரில் 130/3 ரன் எடுத்தது. 7 விக்கெட்டில் வென்று, இத்தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றியை (அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து) பதிவு செய்தது. விஹான் (17), வேதாந்த் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.






      Dinamalar
      Follow us