/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிறந்த ஆண்டாக மாற்றுவோம் * ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை
/
சிறந்த ஆண்டாக மாற்றுவோம் * ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை
சிறந்த ஆண்டாக மாற்றுவோம் * ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை
சிறந்த ஆண்டாக மாற்றுவோம் * ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை
ADDED : ஜன 16, 2025 11:22 PM

ராஜ்கோட்: ''உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த ஆண்டாக 2025 யை மாற்றுவோம்,'' என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் ஆக.,-செப்.,ல் நடக்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 'டாப்-4' அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி, சொந்த மண்ணில் பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் (3-0), அடுத்து அயர்லாந்து (3-0) அணிகளுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா.
தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதுகுறித்து இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறியது:
உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், இரு தொடரிலும் முழுமையாக வெற்றி பெற்றது சிறப்பு. இந்த வெற்றியை தொடர விரும்புகிறோம். இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு 2025ம் ஆண்டினை சிறப்பானதாக மாற்ற முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

