தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தீப்தி சர்மா 'நம்பர்-2' * ஐ.சி.சி., 'டி-20' பவுலர் வரிசையில்...

தீப்தி சர்மா 'நம்பர்-2' * ஐ.சி.சி., 'டி-20' பவுலர் வரிசையில்...

தீப்தி சர்மா 'நம்பர்-2' * ஐ.சி.சி., 'டி-20' பவுலர் வரிசையில்...


ADDED : ஜூலை 08, 2025 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: 'டி-20' பவுலர் அரங்கில் முதன் முறையாக இந்தியாவின் தீப்தி சர்மா, 2வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பவுலர்கள் வரிசையில் கடந்த ஆறு ஆண்டுகளாக 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்ற வருகிறார் இந்திய 'சுழல்' வீராங்கனை தீப்தி சர்மா 27.

தற்போது நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் அனாபெல்லை (736) பின்தள்ளிய இவர், தற்போது 'நம்பர்-2' பவுலராக உள்ளார்.

பாகிஸ்தானின் சாடியாவை (746) விட 8 புள்ளி மட்டும் பின்தங்கியுள்ள தீப்தி (738), விரைவில் 'நம்பர்-1' பவுலராக வரவுள்ளார்.

11 இடம் முன்னேறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி (503), 43வது இடம் பெற்றார்.

பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (771) 3வது இடத்தில் தொடர்கிறார். 2 இடம் முந்திய ஜெமிமா, 12வது இடம் பிடித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us