/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் ஏமாற்றம் * முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி
/
இந்திய பெண்கள் ஏமாற்றம் * முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி
இந்திய பெண்கள் ஏமாற்றம் * முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி
இந்திய பெண்கள் ஏமாற்றம் * முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி
ADDED : பிப் 24, 2026 09:51 PM

பிரிஸ்பேன்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 6 விக்கெட்டில் ஆஸ்ரேலியாவிடம் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரிஸ்பேன் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஸ்மிருதி அரைசதம்
இந்திய அணிக்கு பிரதிகா (0), ஸ்மிருதி மந்தனா ஜோடி மோசமான துவக்கம் தந்தது. அடுத்து வந்த ஷைபாலி (4), ஜெமிமா (8) என இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். இந்தியா 52/3 என திணறியது. பின் இணைந்த ஸ்மிருதி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி, அணியை மீட்டது.
அரைசதம் அடித்த ஸ்மிருதி, 58 ரன்னில் தஹ்லியா பந்தில் அவுட்டானார். தீப்தி (2) கைவிட, ரிச்சா 23 ரன் எடுத்தார். ஹர்மன்பிரீத் கவுர், 53 ரன்னில் வெளியேறினார். பின் வரிசையில் காஷ்வீ, 44 பந்தில் 43 ரன் எடுத்து ரன் அவுட்டானார். இந்திய அணி 48.3 ஓவரில் 214 ரன் எடுத்தது.
மூனே அபாரம்
எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா (50), லிட்ச்பீல்டு (32) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜார்ஜியா, ஸ்ரீசரணி வீசிய பந்தில் 'டக்' அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த பெத் மூனே அனாபெல் ஜோடி வேகமாக ரன் சேர்க்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
மூனே 76 ரன் எடுத்து, தீப்தி பந்தில் 'பெவிலியன்' திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவரில் 217/4 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனாபெல் (48), ஆஷ்லே (5) அவுட்டாகாமல் இருந்தனர். தொடரில் இந்தியா 0-1 என பின்தங்கியது.

