இந்திய பெண்கள் வெற்றி * பயிற்சியில் வீழ்ந்தது இங்கிலாந்து
இந்திய பெண்கள் வெற்றி * பயிற்சியில் வீழ்ந்தது இங்கிலாந்து
ADDED : மே 26, 2026 11:23 PM

செம்ஸ்போர்டு: பயிற்சி போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டி கொண்ட 'டி-20' (மே 28, 30, ஜூன் 2) தொடரில் பங்கேற்கிறது. இதற்குத் தயாராகும் இங்கிலாந்து டெவலப்மெண்ட் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் மோதியது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 154/6 ரன் எடுத்தது. புளோரன்ஸ் (48), ஜோயன்னே (36), கேப்டன் சோபியா (27) உதவினர்.
இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (21), ஷைபாலி ஜோடி துவக்கம் தந்தது. ஷைபாலி (50) அரைசதம் அடித்து 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார்.
யஸ்திகா (47), பார்தி (48) கைகொடுக்க, இந்திய அணி 22 பந்து மீதம் உள்ள நிலையில் (16.2 ஓவர்), 154/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டம் என்பதால் 20 ஓவர் வரை பேட்டிங் செய்த இந்திய அணி, 200/6 ரன் எடுத்தது.
