தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கீதை எனும் பாடம் படிக்கும் கிஷான்... * சாம்பியன் வீரராக மாறிய ரகசியம்

கீதை எனும் பாடம் படிக்கும் கிஷான்... * சாம்பியன் வீரராக மாறிய ரகசியம்

கீதை எனும் பாடம் படிக்கும் கிஷான்... * சாம்பியன் வீரராக மாறிய ரகசியம்


ADDED : டிச 19, 2025 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே: இஷான் கிஷான் அமைதியாக சாதிக்க, பகவத் கீதை உபதேசம் உதவியுள்ளது.

இந்திய அணியின் விக்கெட்கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான், 27. ஆத்திரக்காரரான இவர், உள்ளூர் ரஞ்சி போட்டியை புறக்கணித்தது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்க, 2024ல் பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு சமீபத்திய சையது முஷ்தாக் அலி 'டி-20' தொடர் திருப்புமுனையாக அமைந்தது.

ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக களமிறங்கினார், பைனலில் 49 பந்தில் 101 ரன் (எதிர், ஹரியானா) விளாசினார். ஜார்க்கண்ட் அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்று தந்தார். 10 போட்டியில் 517 ரன் (சராசரி 57.44, ஸ்டிரைக் ரேட் 197.32) குவித்து முதலிடம் பிடித்தார்.

இது பற்றி இஷான் கிஷான் தந்தை பிரனவ் பாண்டே கூறுகையில்,''வாழ்வில் 'டென்ஷனாக' இருக்கும் போது, நம் கேள்வியை மனதில் வைத்து புனிதமான பகவத் கீதை புத்தகத்தை திறக்க வேண்டும். கண் முன் வரும் முதல் பக்கத்திலேயே பதில் கிடைக்கும். பிரச்னைகளை சமாளிக்க உதவும் என தாயார் அடிக்கடி சொல்வார். இதே அறிவுரையை தான் இஷான் கிஷானுக்கும் வழங்கினேன். தற்போது 'பாக்கெட்' வடிவ சிறிய பகவத் கீதை புத்தகத்தை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்கிறார். தேவைப்படும் போது படிக்கிறார். இந்த ஆன்மிக பாதை கிஷனின் பேட்டிங்கை பட்டை தீட்டியது. மனதளவில் முதிர்ச்சி அடைந்த வீரராக மாறியுள்ளார். பதட்டப்படுவதில்லை. பொறுப்பற்ற 'ஷாட்' அடிப்பதில்லை,''என்றார்.



ரூ. 2 கோடி பரிசு

சையது முஷ்தாக் அலி கோப்பை வென்ற இஷான் கிஷான் தலைமையிலான ஜார்க்கண்ட் அணிக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதன் தலைவர் அஜய் நாத் ஷா கூறுகையில்,''நாங்கள் தான் சாம்பியன் என்பது பெருமையான விஷயம். விரைவில் இந்திய அணியில் இஷான் கிஷான் இடம் பெறுவார்,'' என்றார்.

எதிர்பார்ப்பு இல்லை

இஷான் கிஷான் கூறுகையில்,''நன்றாக விளையாடியும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத போது, வருத்தமாக இருக்கும். இத்தகைய எண்ணம் இப்போது வருவதில்லை. எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனது பணி சிறப்பாக செயல்படுவது மட்டுமே. வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் இளம் வீரர்கள் விரக்தி அடைய கூடாது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து இலக்கை நோக்கி பயணியுங்கள்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us