/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தீவிர பயிற்சியில் 'கிங்' கோலி * 13 ஆண்டுக்குப் பின் டில்லியில்...
/
தீவிர பயிற்சியில் 'கிங்' கோலி * 13 ஆண்டுக்குப் பின் டில்லியில்...
தீவிர பயிற்சியில் 'கிங்' கோலி * 13 ஆண்டுக்குப் பின் டில்லியில்...
தீவிர பயிற்சியில் 'கிங்' கோலி * 13 ஆண்டுக்குப் பின் டில்லியில்...
ADDED : ஜன 28, 2025 11:24 PM

புதுடில்லி: சுமார் 13 ஆண்டுக்குப் பின், தனது டில்லி அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் கோலி.
இந்திய அணி வீரர் கோலி 36. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக (8 இன்னிங்ஸ், 184) விளையாடினார். இதனால் இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. இதையடுத்து கடந்த 2012க்குப் பின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காத கோலி, டில்லி அணிக்காக ரயில்வே அணியை எதிர்த்து (ஜன. 30) விளையாட உள்ளார்.
இதற்காக நேற்று டில்லி வீரர்களுடன் சேர்ந்து, தனது பயிற்சியை துவக்கினார். கடந்த 15 ஆண்டாக சர்வதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கோலி, நேற்று காலை 9:00 மணிக்கு 'சேவக் கேட்' வழியாக பெரோஷா கோட்லா மைதானத்திற்கு வந்தார்.
19 வயது பயிற்சியாளர் மகேஷ் பட்டி, தலைமை பயிற்சியாளர் சரண்தீப் சிங், பேட்டிங் பயிற்சியாளர் பாண்டு சிங் என பலரும் கோலியை பின் தொடர்ந்தனர். 35 நிமிடம் 'வார்ம் அப்' செய்த கோலி, அடுத்த 15 நிமிடம் கால்பந்து விளையாடினார். இதன் பின் பேட்டிங் பயிற்சிக்கு வந்தார்.
அப்போது டில்லி கேப்டன் ஆயுஸ் படோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கோலியை பார்த்த ஆயுசிடம், 'நீங்கள் பயிற்சியை தொடருங்கள். பிறகு நாம் பேட்டிங் செய்யலாம்,' என்றார். பின் ஒரு மணி நேரம், 'த்ரோ டவுன்' பந்தில் பேட்டிங் செய்தார் கோலி.
அடுத்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷ் தியாகி, சுமித் மாத்துர் பந்தில் பேட்டிங் செய்தார். ஸ்டம்சை விட்டு விலகிச் செல்லும் பந்துகளை அதிகமாக எதிர்கொண்டு விளையாடினார்.
மைதானத்தில் மூன்று மணி நேரம் செலவிட்ட கோலி, தனது ஜாலியான செயல்களால் அனைவரையும் கவர்ந்தார். பார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோலி எப்போதும் 'கிங்' தான்.
மறுப்பு
டில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'' கோலிக்கு சோல் பூரி பிடிக்கும். அவருக்கு வழங்க தயாராக இருந்தோம். ஆனால் கோலி வேண்டாம் என மறுத்து விட்டார்,'' என்றார்.
சிறுவனுக்கு 'அட்வைஸ்'
கோலியுடன் 17, 19 வயது டில்லி அணியில் விளையாடியவர் ஷாவேஸ். இவர் தனது நான்காம் வகுப்பு படிக்கும் மகனுடன் கோலியை காண வந்தார். கோலியை சந்தித்தது குறித்து கபிர் கூறுகையில்,'' இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும்,'' என்றார்.

