தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஷமி மீண்டும் காயம்

ஷமி மீண்டும் காயம்

ஷமி மீண்டும் காயம்


ADDED : அக் 02, 2024 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக முகமது ஷமி, ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 34. கடைசியாக 2023, உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். இதில் 24 விக்கெட் சாய்த்து, இந்தியா பைனலுக்கு முன்னேறிய உதவியாக இருந்தார்.

கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 'ஆப்பரேஷன்' நடந்தது. இதில் இருந்து மீண்டு வந்தார். இதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டார். வரும் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக களமிறங்கி, அடுத்து நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் (அக். 19-நவ. 5) பங்கேற்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இவரது முழங்காலில் மீண்டும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீண்டு வர, குறைந்தது 6 முதல் 8 வாரம் தேவைப்படும். இதனால் முகமது ஷமி, ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ள 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us