sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

நேபாளத்திடம் வீழ்ந்தது வெ.இண்டீஸ் * தொடரை இழந்து சோகம்

/

நேபாளத்திடம் வீழ்ந்தது வெ.இண்டீஸ் * தொடரை இழந்து சோகம்

நேபாளத்திடம் வீழ்ந்தது வெ.இண்டீஸ் * தொடரை இழந்து சோகம்

நேபாளத்திடம் வீழ்ந்தது வெ.இண்டீஸ் * தொடரை இழந்து சோகம்


ADDED : செப் 30, 2025 10:55 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சார்ஜா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 'டி-20' தொடரை முதன் முறையாக கைப்பற்றி, வரலாறு படைத்தது நேபாள அணி. இரண்டாவது போட்டியில் 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ், நேபாள அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட 'டி-20' தொடர் சார்ஜாவில் நடக்கிறது. முதல் போட்டியில் நேபாளம் வென்றுது. இரண்டாவது போட்டியில் 'டாஸ்' வென்ற நேபாள கேப்டன் ரோகித் பவுடல் பேட்டிங் தேர்வு செய்தார்.

நேபாள அணிக்கு 6.4 ஓவரில் 43/3 ரன் என திணறியது. அடுத்து ஆசிப் ஷேக், சுந்தீப் ஜோரா இணைந்து அணியை மீட்டனர். 11 ஓவரில் 100 ரன் சேர்த்த போது, சுந்தீப் (63) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் நேபாள அணி 173/6 ரன் எடுத்தது. ஆசிப் (68) அவுட்டாகாமல் இருந்தனர்.

மீண்டும் தோல்வி

இரு முறை 'டி-20' உலக சாம்பியன் ஆன, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அக்கீம் (17), ஜாங்கூ (16), ஜேசன் ஹோல்டர் (21) என மூவர் மட்டும் இரட்டை இலக்கத்தை எட்டினர். 17.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்னுக்கு சுருண்டது. நேபாள அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. ஐ.சி.சி., முழு அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக ரன் அடிப்படையில் (90) சிறந்த வெற்றியை பதிவு செய்த அணியானது நேபாளம்.

83 ரன்னில்...

ஐ.சி.சி., உறுப்பு அணிக்கு எதிரான 'டி-20' போட்டியில், குறைந்த ரன்னுக்கு சுருண்ட, முழு அந்தஸ்து பெற்ற அணியானது வெஸ்ட் இண்டீஸ் (83/10). முன்னதாக 2014 'டி-20' உலக தொடரில் நெதர்லாந்துக்கு (133/8) எதிராக, இங்கிலாந்து அணி 88 ரன்னில் சுருண்டு தோற்றது.






      Dinamalar
      Follow us