தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆர்யன் தத் ஆர்வம் * இந்திய மண்ணில் விளையாட...

ஆர்யன் தத் ஆர்வம் * இந்திய மண்ணில் விளையாட...

ஆர்யன் தத் ஆர்வம் * இந்திய மண்ணில் விளையாட...


ADDED : ஜன 29, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டினம்: 'உலக கோப்பை தொடரில் நேரம் கிடைத்தால் குடும்ப உறவுகளை சந்திக்க காத்திருக்கிறேன்,'' என ஆர்யன் தத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப். 7ல் துவங்குகிறது. இதில் நெதர்லாந்து அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிப். 10ல் டில்லியில் நடக்கும் போட்டியில் நமீபியா, அடுத்து பிப். 18ல் ஆமதாபாத்தில் இந்திய அணிகளுடன் விளையாட உள்ளது.

இதுகுறித்து நெதர்லாந்து அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி சுழற்பந்துவீச்சு 'ஆல் ரவுண்டர்' ஆர்யன் தத் 22, கூறியது:

கடந்த 2023 உலக கோப்பை தொடருக்குப் பின், இந்திய வருவதற்கு நேரம் கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் இங்கு வந்தது மகிழ்ச்சி. மறுபடியும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது, கூடுதல் ஸ்பெஷல்.

டில்லியில் நடக்கும் போட்டியை எனது குடும்பத்தினர் நேரில் பார்க்க உள்ளனர். நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களை சந்தித்து உரையாட, ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

அடுத்து, நடப்பு சாம்பியன், உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளேன். இது, எனது வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய தருணம். நிரம்பி வழிய உள்ள, உலகின் பெரிய மோடி மைதானம், வித்தியாசமான உணர்வை தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூர்விகம் பஞ்சாப்

ஆர்யன் தத் தந்தை பஞ்சாப்பை சேர்ந்தவர். 1980 களில் நெதர்லாந்துக்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள ஹக் நகரில் 2003ல் பிறந்த ஆர்யன், கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர். தனது 13 வயதில் சண்டிகர் வந்து, சில ஆண்டுகள் பயிற்சியில் ஈடுபட்டார்.

கடந்த 2023ல் ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக இந்தியா வந்தார். 9 போட்டியில் 70 ரன் எடுத்த ஆர்யன், 10 விக்கெட் சாய்த்தார். தற்போது இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us