/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது பாகிஸ்தான் * 'வேகமாக' சரிந்தது ஆஸி.,
/
கோப்பை வென்றது பாகிஸ்தான் * 'வேகமாக' சரிந்தது ஆஸி.,
கோப்பை வென்றது பாகிஸ்தான் * 'வேகமாக' சரிந்தது ஆஸி.,
கோப்பை வென்றது பாகிஸ்தான் * 'வேகமாக' சரிந்தது ஆஸி.,
ADDED : நவ 11, 2024 12:30 AM

பெர்த்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று, மூன்றாவது போட்டி பெர்த்தில் நடந்தது.
ஸ்மித் 'ரெஸ்ட்'
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பொருட்டு, ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், லபுசேன், ஹேசல்வுட் உட்பட முன்னணி வீரர்களுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டது. கேப்டன் பொறுப்பை ஜோஷ் இங்லிஸ் ஏற்றார். பாகிஸ்தான் தரப்பில் 'டாஸ்' வென்ற கேப்டன் ரிஸ்வான், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கூப்பர் காயம்
பாகிஸ்தான் 'வேகங்கள்' போட்டுத்தாக்க, ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. நசீம் ஷா பந்தில் பிரேசர் மெக்குர்க் (7) வெளியேறினார். ஷாகீன் ஷா அப்ரிதி 'வேகத்தில்' ஹார்டி (12) வீழ்ந்தார். ஜோஷ் இங்லிஸ் (7), ஷார்ட் (22) நிலைக்கவில்லை. முகமது ஹஸ்னைன் பந்தில் 'புல் ஷாட்' அடிக்க முயற்சித்த கூப்பர் கொனாலியின் (7), இடது கையில் காயம் ஏற்பட்டது. இவர் 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியின் திரும்பினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 'டக்' அவுட்டானார். ஸ்டாய்னிஸ் (8) ஏமாற்றினார். கடைசி கட்டத்தில் போராடிய சீன் அபாட் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 26.5 ஓவரில் 143 ரன்னுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
மின்னல் வெற்றி
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் (42), சைம் அயூப் (37) நல்ல துவக்கம் தந்தனர். பின் கேப்டன் ரிஸ்வான், அனுபவ பாபர் ஆசம் அதிரடியாக ஆடினர். ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பாபர், வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் (30), பாபர் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
22 ஆண்டு...
ரிஸ்வான் தலைமையில் சென்ற பாகிஸ்தான் அணி, 22 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது. இதற்கு முன் 2002ல் வக்கார் யூனிஸ் தலைமையில் 2-1 என தொடரை கைப்பற்றியது.