sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

காஷ்மீர் அணி அபாரம் * கிடைக்குமா 'முதல்' பைனல்

/

காஷ்மீர் அணி அபாரம் * கிடைக்குமா 'முதல்' பைனல்

காஷ்மீர் அணி அபாரம் * கிடைக்குமா 'முதல்' பைனல்

காஷ்மீர் அணி அபாரம் * கிடைக்குமா 'முதல்' பைனல்


ADDED : பிப் 17, 2026 11:19 PM

Google News

ADDED : பிப் 17, 2026 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்யாணி: ரஞ்சி கோப்பை தொடரில் அரையிறுதியில் வெற்றி பெற காத்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் அணி.

மேற்குவங்கத்தின் கல்யாணியில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஜம்மு காஷ்மீர், பெங்கால் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் பெங்கால் 328 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 198/5 ரன் எடுத்து இருந்தது.

ஷமி 8 விக்கெட்

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல் அவுட்டானது. முகமது ஷமி (8 விக்.,), தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி, இரண்டாவது இன்னிங்சில் 99 ரன்னுக்கு சுருண்டது. அகுய்ப் நபி, சுனில் குமார் தலா 4 விக்கெட் சாய்த்தனர். பின், 126 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய காஷ்மீர் அணி, மூன்றாவது நாள் முடிவில் 43/2 ரன் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில், இன்று 83 ரன் எடுக்கும் பட்சத்தில், ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக காஷ்மீர் அணி, பைனலுக்கு செல்லலாம்.

லக்னோவில் நடக்கும் அரையிறுதியில் கர்நாடகா, உத்தகாண்ட் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் கர்நாடகா 736 ரன் குவித்தது. மூன்றாவது நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 149/5 ரன் எடுத்து, 587 ரன் பின்தங்கி இருந்தது.






      Dinamalar
      Follow us