/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கர்நாடகா-காஷ்மீர் மோதல் * ரஞ்சி பைனல் இன்று துவக்கம்
/
கர்நாடகா-காஷ்மீர் மோதல் * ரஞ்சி பைனல் இன்று துவக்கம்
கர்நாடகா-காஷ்மீர் மோதல் * ரஞ்சி பைனல் இன்று துவக்கம்
கர்நாடகா-காஷ்மீர் மோதல் * ரஞ்சி பைனல் இன்று துவக்கம்
ADDED : பிப் 23, 2026 11:14 PM

ஹப்பள்ளி: ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது. லீக் சுற்றில் தமிழகம், காலிறுதியில் நடப்பு சாம்பியன் மும்பை உள்ளிட்ட 36 அணிகள் வெளியேறின. இன்று கர்நாடகாவின் ஹப்பள்ளியில் துவங்கும் பைனலில், கர்நாடகா, காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் உள்ளூர், வெளியூர் என அனைத்து மைதானத்தில் நடந்த போட்டியிலும் கர்நாடகா ஆதிக்கம் செலுத்தியது. லோகேஷ் ராகுல், (3 போட்டி, 457 ரன்), கருண் (8ல் 699 ரன்), கேப்டன் தேவ்தத் படிக்கல் (5ல் 532), ஸ்மரன் (8ல் 950) என பேட்டிங் பலமாக அமைய, 11 ஆண்டுக்குப் பின் பைனலுக்கு முன்னேறியது.
ஷ்ரேயஸ் கோபால் 46 விக்கெட் சாய்த்து, 442 ரன் எடுத்து 'ஆல் ரவுண்டராக' திகழ்கிறார். சர்வதேச அனுபவம் பெற்ற பிரசித் கிருஷ்ணா, கவேரப்பா, விஜயகுமார் பவுலிங்கில் உதவினால், 9வது முறையாக கர்நாடகா கோப்பை வெல்லலாம்.
முதன் முறை
ரஞ்சி கோப்பை அரங்கில் 1959ல் களமிறங்கிய ஜம்மு அண்டு காஷ்மீர் அணி, 67 ஆண்டில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. பேட்டிங்கில் அப்துல் சமத் (9ல் 655 ரன்), 41 வயது கேப்டன் டோக்ரா (9ல் 551), 55 விக்கெட் சாய்த்த அகுய்ப் நபி, சுனில் குமார் (29) கைகொடுத்தால், ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் கோப்பை கைப்பற்றலாம்.

