தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/காஷ்மீர் அணி ரன்குவிப்பு * கர்நாடக பவுலர்கள் திணறல்

காஷ்மீர் அணி ரன்குவிப்பு * கர்நாடக பவுலர்கள் திணறல்

காஷ்மீர் அணி ரன்குவிப்பு * கர்நாடக பவுலர்கள் திணறல்


ADDED : பிப் 25, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹப்பள்ளி: ரஞ்சி கோப்பை பைனல் முதல் இன்னிங்சில் காஷ்மீர் அணி, 527/6 ரன் குவித்து உள்ளது.

ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது. கர்நாடகாவின் ஹப்பள்ளியில் நடக்கும் பைனலில், கர்நாடகா, காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்று பேட்டிங் செய்த காஷ்மீர் அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 284/2 ரன் எடுத்திருந்தது. சுபம் (117), அப்துல் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

மீண்டும் டோக்ரா

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. 3வது விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்த நிலையில், 121 ரன் எடுத்த சுபம், வித்யாதர் பந்தில் வீழ்ந்தார். அடுத்த சில நிமிடத்தில் பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' அப்துல் (61) அவுட்டானார். அடுத்து கன்ஹையா, முதல் நாளில் காயத்தால் வெளியேறிய கேப்டன் டோக்ரா ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். பிரசித் வீசிய (101 வது) ஓவரில் கன்ஹையா 2, டோக்ரா 1 பவுண்டரி அடித்தனர். தொடர்ந்து இருவரும் அரைசதம் அடித்தனர். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன் சேர்த்த போது, கன்ஹையா (70) அவுட்டானார். கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோக்ரா, தன் பங்கிற்கு 70 ரன் எடுத்து, ஷ்ரேயஸ் கோபால் பந்தில் போல்டானார்.

பின் இணைந்த சாஹில் லோட்ரா, அபித் முஷ்தாக் ஜோடி கைகொடுக்க, காஷ்மீர் அணியின் ஸ்கோர் 500 ரன்களை கடந்தது. இரண்டாவது நாள் முடிவில் காஷ்மீர் அணி, முதல் இன்னிங்சில் 527/6 ரன் எடுத்திருந்தது. அரைசதம் அடித்த சாஹில் (57), அபித் (20) அவுட்டாகாமல் இருந்தனர். கர்நாடகா சார்பில் பிரசித் 3 விக்கெட் சாய்த்தார்.

முட்டல்-மோதல்

காஷ்மீர் அணி கேப்டன் பராஸ் டோக்ரா 41. ரஞ்சி தொடரில் 21வது முறையாக பங்கேற்கிறார். நேற்று பிரசித் வீசிய பந்தில் (100.4வது ஓவர்), டோக்ரா பவுண்டரி அடித்தார்.

அப்போது அருகில் பீல்டிங் செய்த கர்நாடகாவின் அனீஷ் (மாற்று வீரர்), டோக்ரா இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. வேகமாக சென்ற டோக்ரா, அனீஷ் 'ஹெல்மெட்' மீது முட்டினார்.

உடனே, இருவருக்கும் இடையில் உள்ளே வந்த கேப்டன் மயங்க் அகர்வால், 'இது சரியா' என கேட்க, 'டென்ஷன்' எகிறியது. பின் அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

ஓவர் முடிந்த பின் டோக்ரா மன்னிப்பு கேட்க, அதை அனிஷ் நிராகரித்தார். அடுத்து டோக்ரா பேட்டிங் செய்த போது, அருகில் பீல்டிங் செய்த ராகுல், மயங்க் அகர்வால் என இருவரும் தொடர்ந்து டோக்ராவை திட்டிக் கொண்டே இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us