தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கர்நாடக அணி திணறல் * மயங்க் அகர்வால் சதம்

கர்நாடக அணி திணறல் * மயங்க் அகர்வால் சதம்

கர்நாடக அணி திணறல் * மயங்க் அகர்வால் சதம்


ADDED : பிப் 26, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹப்பள்ளி: ரஞ்சி கோப்பை பைனல் முதல் இன்னிங்சில் கர்நாடக அணி திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது. கர்நாடகாவின் ஹப்பள்ளியில் நடக்கும் பைனலில், கர்நாடகா, காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் முடிவில் காஷ்மீர் அணி, முதல் இன்னிங்சில் 527/6 ரன் எடுத்திருந்தது. சாஹில் (57), அபித் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அபித் (28), அவுகிப் நபி (2) என இருவரையும் பிரசித் கிருஷ்ணா வெளியேற்றினார். சாஹில் 72 ரன் எடுத்தார். கடைசியில் யுத்விர் (30) ரன் அவுட்டாக, காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கர்நாடகா சார்பில் பிரசித் 5 விக்கெட் சாய்த்தார்.

மயங்க் அபாரம்

கர்நாடக அணிக்கு அனுபவ ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. வேகத்தில் மிரட்டிய அவுகிப் நபி, முதலில் ராகுலை (13) வெளியேற்றினார். கேப்டன் தேவ்தத் படிக்கல் (11) ஏமாற்றினார். மீண்டும் வந்த அவுகிப் நபி, கருண் நாயர் (0), ஸ்மரனை (0) அடுத்தடுத்த பந்தில் அவுட்டாக்க்கினார்.

கர்நாடகா 57/4 என திணறியது. பின் மயங்க், ஸ்ரேயாஸ் கோபால் (27) ஜோடி 5வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க், சதம் அடித்தார். மூன்றாவது நாள் முடிவில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 220/5 ரன் எடுத்து, 364 ரன் பின்தங்கி இருந்தது. மயங்க் (130), கிருஷ்ணா (27) அவுட்டாகாமல் இருந்தனர். அவுகிப் 3 விக்கெட் சாய்த்தார்.

யாருக்கு வாய்ப்பு

ரஞ்சி கோப்பை பைனல் முடிய, 2 நாள் ஆட்டம் மீதமுள்ளன. இன்னும், முதல் இன்னிங்ஸ் முடியாத நிலையில் போட்டி 'டிரா' ஆகலாம். இதனால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணிக்கு கோப்பை கிடைக்கும்.

* கர்நாடக தரப்பில் கைவசம் 5 விக்கெட் உள்ளன. காஷ்மீர் அணியை முந்துவதற்கு, இன்னும் 365 ரன் தேவைப்படுகிறது. மறுபக்கம், காஷ்மீர் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால், முதன் முறையாக ரஞ்சி கோப்பை வெல்வதை, இன்று உறுதி செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us