தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ வரலாறு படைத்தது காஷ்மீர் * முதல் ரஞ்சி கோப்பை வென்று அசத்தல்

வரலாறு படைத்தது காஷ்மீர் * முதல் ரஞ்சி கோப்பை வென்று அசத்தல்

வரலாறு படைத்தது காஷ்மீர் * முதல் ரஞ்சி கோப்பை வென்று அசத்தல்


ADDED : பிப் 28, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ரஞ்சி கோப்பை அரங்கில் முதன் முறையாக சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது காஷ்மீர் அணி. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கர்நாடகாவை சாய்த்தது.

இந்தியாவின் முதல் தர ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடந்தது. 'எலைட்' பிரிவில் 32 (4 குரூப்), 'பிளேட்' பிரிவில் 6 என மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. ஜம்மு அண்டு காஷ்மீர் அணி முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது. கர்நாடகாவின் ஹப்பள்ளியில் நடந்த பைனலில், ராகுல், மயங்க் அகர்வால், கேப்டன் தேவ்தத் படிக்கல் என இந்திய வீரர்கள் அடங்கிய கர்நாடகாவை எதிர்கொண்டது காஷ்மீர்.

முதல் இன்னிங்சில் காஷ்மீர் 584, கர்நாடகா 293 ரன் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் காஷ்மீர் அணி, இரண்டாவது இன்னிங்சில் 186/4 ரன் எடுத்து, 477 ரன் முன்னிலை பெற்றிருந்தது. இக்பால் (94), சாஹில் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

இக்பால் சதம்

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. கம்ரான் இக்பால், சாஹில் என இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். இக்பால் சதம் அடித்தார். இவர்களை பிரிக்க முடியாமல் கர்நாடக பவுலர்கள் போராடினர். மயங்க் அகர்வால் பந்தில் சிக்சர் அடித்த இக்பால், 150 ரன்களை கடந்தார்.

இவருக்கு 'கம்பெனி' கொடுத்த சாஹில், தன் பங்கிற்கு முதல் தர போட்டிகளில் முதல் சதம் (22 வது போட்டி) அடித்தார். காஷ்மீர் அணி இரண்டாவது இன்னிங்சில் 342/4 ரன் எடுத்து, 633 ரன் முன்னிலை பெற்ற நிலையில் 'டிக்ளேர்' செய்வதாக அறிவித்தது. இக்பால் (160), சாஹில் (101) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் பின், இரண்டாவது இன்னிங்சை விளையாடாத கர்நாடகா, காஷ்மீர் அணி கேப்டன்கள் போட்டியை 'டிரா' செய்ய சம்மதித்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காஷ்மீர் அணி, ரஞ்சி கோப்பை கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us