sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சுருண்டது மும்பை அணி * ரஞ்சி கோப்பை காலிறுதியில்...

/

சுருண்டது மும்பை அணி * ரஞ்சி கோப்பை காலிறுதியில்...

சுருண்டது மும்பை அணி * ரஞ்சி கோப்பை காலிறுதியில்...

சுருண்டது மும்பை அணி * ரஞ்சி கோப்பை காலிறுதியில்...


ADDED : பிப் 06, 2026 11:06 PM

Google News

ADDED : பிப் 06, 2026 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ரஞ்சி கோப்பை காலிறுதியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 120 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியாவில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று காலிறுதி போட்டிகள் துவங்கின. மும்பையில் நடக்கும் போட்டியில் மும்பை, கர்நாடகா மோதுகின்றன. 'டாஸ்' வென்று பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ஜெய்ஸ்வால் (5), அகில் ஹெர்வத்கர் ஜோடி துவக்கம் தந்தது. முஷீர் கான் (1), கேப்டன் ஷர்துல் தாகூர் (16) ஏமாற்றினர். அகில் அதிகபட்சம் 60 ரன் எடுத்தார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 120 ரன்னுக்கு சுருண்டது. கர்நாடகாவின் பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால், வித்வாத் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய கர்நாடக அணிக்கு ராகுல் (28), தேவ்தத் படிக்கல் (17) ஏமாற்றம் தந்தனர். கேப்டன் மயங்க் அகர்வால் (54) அரைசதம் அடிக்க, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 110/2 ரன் எடுத்து, 10 ரன் பின்தங்கி இருந்தது.

* ஜாம்ஷெட்பூரில் நடக்கும் காலிறுதியில் ஜார்க்கண்ட் 235 ரன் எடுத்தது. உத்தரகாண்ட் அணி 4/0 ரன் எடுத்து, 231 ரன் பின்தங்கி இருந்தது.

* பெங்கால் அணிக்கு எதிரான காலிறுதியில் ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 264/6 ரன் எடுத்திருந்தது.

* மற்றொரு காலிறுதியில் ஜம்மு அண்டு காஷ்மீர் அணி 194 ரன் எடுக்க, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேச அணி 28/0 ரன் எடுத்து, 166 ரன் பின்தங்கி இருந்தது.






      Dinamalar
      Follow us