தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழக அணி ஆதிக்கம் * ரஞ்சி கோப்பை போட்டியில்

தமிழக அணி ஆதிக்கம் * ரஞ்சி கோப்பை போட்டியில்

தமிழக அணி ஆதிக்கம் * ரஞ்சி கோப்பை போட்டியில்


ADDED : ஜன 24, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்: இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 91வது சீசன் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி, தனது 6வது போட்டியில் ஒடிசாவை சந்தித்தது. புவனேஸ்வரில் (ஒடிசா) நடக்கும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழகம் 286, ஒடிசா 148 ரன் எடுத்தன. 2வது நாள் முடிவில் தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 26/1 ரன் எடுத்து, 164 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆதிஷ் 88 ரன் எடுத்தார். குருசாமி 49, கேப்டன் சாய் கிஷோர் 40 ரன் எடுத்தனர். சோனு யாதவ் 75 பந்தில் 74 ரன் எடுத்து உதவினார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 316/10 ரன் எடுத்தது.

பின் 455 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஒடிசா அணி, மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 47/2 ரன் எடுத்து, 408 ரன் பின்தங்கி இருந்தது.

ஷமி 'ஐந்து'

கோல்கட்டாவில் பெங்கால், சர்வீசஸ் அணிகள் மோதும் போட்டி ('சி') நடக்கிறது. முதல் இன்னிங்சில் பெங்கால் 519, சர்வீசஸ் 186 ரன் எடுத்தன. 'பாலோ ஆன்' பெற்ற சர்வீசஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 231/8 ரன் எடுத்து, 102 ரன் பின்தங்கி இருந்தது. பெங்கால் வீரர் முகமது ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.

ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் ('டி') மும்பை அணி முதல் இன்னிங்சில் 560 ரன் எடுத்தது. ஐதராபாத் அணி 267 ரன்னில் ஆல் அவுட்டாகி, 'பாலோ ஆன்' பெற்றது. 3வது நாள் முடிவில் ஐதராபாத் அணி, இரண்டாவது இன்னிங்சில் 166/7 ரன் எடுத்து, 127 ரன் பின்தங்கி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us