/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
176 ரன் விளாசினார் ரிங்கு சிங் * தமிழக அணி ஏமாற்றம்
/
176 ரன் விளாசினார் ரிங்கு சிங் * தமிழக அணி ஏமாற்றம்
176 ரன் விளாசினார் ரிங்கு சிங் * தமிழக அணி ஏமாற்றம்
176 ரன் விளாசினார் ரிங்கு சிங் * தமிழக அணி ஏமாற்றம்
ADDED : நவ 19, 2025 10:58 PM

கோவை: கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'எலைட் ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்சில் 455 ரன் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் உ.பி., அணி முதல் இன்னிங்சில் 339/6 ரன் எடுத்து, 116 ரன் பின்தங்கி இருந்தது. ரிங்கு சிங் (98), ஷிவம் சர்மா (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரிங்கு அபாரம்
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ரிங்கு சிங் சதம் கடந்தார். ஷிவம் சர்மா (22), கார்த்திக் (20) நிலைக்கவில்லை. ரிங்கு சிங் 176 ரன் எடுத்து, வித்யூத் பந்தில் வீழ்ந்தார். ஆகிப் கான் (14*), குனால் தியாகி (5) இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 17 ரன் சேர்க்க, முதல் இன்னிங்சில் 460 ரன் எடுத்த உ.பி., அணி, 5 ரன் முன்னிலை பெற்றது.
பின் களமிறங்கிய தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 103/2 ரன் எடுத்திருந்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்சில் முந்திய உ.பி., 3 புள்ளி, தமிழகம் 1 புள்ளி பெற்றன.
'ஏ' பிரிவில் தமிழக அணி 5 போட்டியில் 2 டிரா, 3 தோல்வியுடன் 5 புள்ளி பெற்று, 7வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டியில் வென்றாலும் காலிறுதிக்கு முன்னேற முடியாது.
மும்பை வெற்றி
மும்பை வான்கடேயில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 630/5 ரன் எடுத்தது. புதுச்சேரி அணி, முதல் இன்னிங்சில் 132, 2வது இன்னிங்சில் 276 ரன் எடுத்தது. மும்பை அணி இன்னிங்ஸ், 222 ரன்னில் வெற்றி பெற்றது.

