/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை வெல்லுமா கேரளா * விதர்பா அணியுடன் பைனல்
/
ரஞ்சி கோப்பை வெல்லுமா கேரளா * விதர்பா அணியுடன் பைனல்
ரஞ்சி கோப்பை வெல்லுமா கேரளா * விதர்பா அணியுடன் பைனல்
ரஞ்சி கோப்பை வெல்லுமா கேரளா * விதர்பா அணியுடன் பைனல்
ADDED : பிப் 25, 2025 10:47 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் இன்று கேரளா, விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90 வது சீசன் நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் பைனலில் விதர்பா, கேரளா அணிகள் மோதுகின்றன. விதர்பா அணி ஒருமுறை (2018-19) கோப்பை வென்றுள்ளது. இம்முறை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்திய உற்சாகத்தில் வந்துள்ளது. இத்தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் 3வது இடத்திலுள்ள யாஷ் ரத்தோட் (933 ரன்), அக்சய் வாத்கர் (674), கேப்டன் கருண் நாயர் (642) உள்ளிட்டோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் 66 விக்கெட் சாய்த்த ஹர்ஷ் துபே, ஆயுஸ் தாக்கரே (28), வாகரே (27) உதவலாம். இதில் துபே 3 விக்கெட் சாய்த்தால், ஒரு சீசனில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் ஆகலாம். தற்போது பீகார் வீரர் அஷுதோஷ் (68) முதலிடத்தில் உள்ளார்.
கேரளாவை பொறுத்தவரையில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. சல்மான் (607), முகமது அசாருதீன் (601), கேப்டன் சச்சின் பேபி (418) மீண்டும் கைகொடுத்தால், முதல் கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். பவுலிங்கில் சக்சேனா (38), சர்வேத் (30), நிதேஷ் (23) நம்பிக்கை தரலாம்.

