தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழக பவுலர்கள் அபாரம் * ரஞ்சி கோப்பை போட்டியில்...

தமிழக பவுலர்கள் அபாரம் * ரஞ்சி கோப்பை போட்டியில்...

தமிழக பவுலர்கள் அபாரம் * ரஞ்சி கோப்பை போட்டியில்...


ADDED : அக் 11, 2024 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக அணி பவுலிங்கை சமாளிக்க முடியாத சவுராஷ்டிரா அணி, முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடரின் 90 வது சீசன் நேற்று துவங்கியது. கோவையில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முகமது 'மூன்று'

சவுராஷ்டிரா அணிக்கு ஹர்விக் (0), சிராக் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. மறுபக்கம் வேகத்தில் மிரட்டிய முகமது, முதலில் சிராக்கை (34) வெளியேற்றினார். அடுத்து பர்ஸ்வராஜ் ராணாவை (15) அவுட்டாக்கினார். அனுபவ வீரர் புஜாராவை (16), தமிழக அணி கேப்டன் சாய் கீஷோர் போல்டாக்கினார். மீண்டும் மிரட்டிய முகமது, இம்முறை ஷெல்டன் ஜாக்சனை (21) திருப்பி அனுப்பினார். கேப்டன் உனத்கட் (21), சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழகத்தின் சார்பில் முகமது, சாய் கிஷோர், சோனு தலா 3 விக்கெட் சாய்த்தனர். பின் களமிறங்கிய தமிழக அணி முதல் நாள் முடிவில், 2 ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us