/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: தமிழகம் 'டிரா' * ஜெகதீசன் ஆறுதல் சதம்
/
ரஞ்சி கோப்பை: தமிழகம் 'டிரா' * ஜெகதீசன் ஆறுதல் சதம்
ரஞ்சி கோப்பை: தமிழகம் 'டிரா' * ஜெகதீசன் ஆறுதல் சதம்
ரஞ்சி கோப்பை: தமிழகம் 'டிரா' * ஜெகதீசன் ஆறுதல் சதம்
ADDED : நவ 09, 2024 10:50 PM

கவுகாத்தி: தமிழகம், அசாம் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி 'டிரா' ஆனது. ஜெகதீசன் சதம் அடித்து ஆறுதல் தந்தார்.
அசாமின் கவுகாத்தியில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 338, அசாம் 445 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தது. சுரேஷ் லோகேஷ்வர் (2), நாராயண் ஜெகதீசன் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜெகதீசன் நம்பிக்கை
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சுரேஷ் (3) நிலைக்கவில்லை. விஜய் சங்கர் 23 ரன் எடுத்தார். பின் இணைந்த ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது. சிறப்பாக செயல்பட்ட ஜெகதீசன், முதல் தர கிரிக்கெட்டில் 10 வது சதம் கடந்தார். பிரதோஷ் அரைசதம் அடித்தார்.
தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 217/2 ரன் எடுத்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஜெகதீசன் (118), பிரதோஷ் (68) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் அசாம் 3, தமிழகம் 1 புள்ளி பெற்றன.
இதுவரை மோதிய 4 போட்டியில் 1 வெற்றி, 3 'டிரா' செய்த தமிழகம், 12 புள்ளியுடன் பட்டியலில் 3வதாக உள்ளது.
மும்பை அபாரம்
மும்பையில் நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் மும்பை, ஒடிசா மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 602/4 ரன் (டிக்ளேர்) குவித்தது. ஒடிசா அணி முதல் இன்னிங்சில் 285, 'பாலோ ஆன்' பெற்று தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் 214 ரன் எடுத்தது. மும்பை அணி இன்னிங்ஸ், 103 ரன்னில் வெற்றி பெற்றது.