தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஷைபாலி வர்மா 'நம்பர்-6' * ஐ.சி.சி., தரவரிசையில்...

ஷைபாலி வர்மா 'நம்பர்-6' * ஐ.சி.சி., தரவரிசையில்...

ஷைபாலி வர்மா 'நம்பர்-6' * ஐ.சி.சி., தரவரிசையில்...


ADDED : ஏப் 21, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: 'டி-20' பேட்டர் வரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறினார் ஷைபாலி வர்மா.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் 'டி-20' தொடரின் முதல் இரு போட்டி செயல்பாட்டிற்கு ஏற்ப, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் படி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா 22, இரண்டு இடம் முன்னேறி, 'நம்பர்-6' ஆக உள்ளார். இவர் முதல் இரு போட்டியில் 34, 57 ரன் அடித்ததை அடுத்து, இந்த முன்னேற்றம் கிடைத்தது.

13, 12 ரன் மட்டும் எடுத்த இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஒரு இடம் பின்தங்கி, நான்காவது இடம் பெற்றார். முதல் போட்டியில் 47 ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2 இடம் முந்தி, 11 வது இடம் பிடித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா (14) 4 இடம் பின் தள்ளப்பட்டார். 'டாப்-3' இடத்தில் ஜார்ஜியா (ஆஸி.,), பெத் மூனே (ஆஸி.,), மாத்யூஸ் (வெ.இண்டீஸ்) உள்ளனர்.

தீப்தி சரிவு

பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 2 இடம் பின்தங்கி 5வது இடம் பெற்றார். இந்தியாவின் ரேணுகா, 9, அருந்ததி 12வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். 'ஆல் ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் தீப்தி (362) 3வது இடத்தில் தொடர்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us