ADDED : டிச 11, 2024 10:44 PM

புதுடில்லி: சாய் சுதர்சனுக்கு 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' ஆப்பரேஷன் செய்யப்பட்டது.
இந்திய அணி வீரர் சாய் சுதர்சன் 23. இதுவரை 3 ஒருநாள், 1 'டி-20'ல் விளையாடியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் குஜராத் அணிக்காக விளையாடுகிறார். கடந்த சீசனில் இந்த அணிக்காக அதிக ரன் (527) எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார். இந்த ஆண்டு ரூ. 8.50 கோடிக்கு குஜராத் அணி, தக்கவைத்துக் கொண்டது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய ஏ அணியில் இடம் பெற்ற இவர், 21, 103, 0, 3 ரன் எடுத்தார். அடுத்து ரஞ்சி கோப்பையில் 82 (எதிரணி-சவுராஷ்டிரா), 213 (டில்லி) ரன் எடுத்தார்.
'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பிரச்னையால் அவதிப்பட்ட இவருக்கு, லண்டனில் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ஹசாரே டிராபி (டிச. 21-ஜன. 18) பங்கேற்க மாட்டார். ஐ.பி.எல்., தொடர் துவங்கும் முன் (2025, மார்ச்) முழு உடற்தகுதி பெறுவார் எனத் தெரிகிறது. இதுகுறித்து சாய் சுதர்சன் வெளியிட்ட செய்தியில்,'விரைவில் வலிமையாக மீண்டு வருவேன்,' என தெரிவித்துள்ளார்.