தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/97 பந்தில் இரட்டை சதம் * சமீர் ரிஸ்வி கலக்கல்

97 பந்தில் இரட்டை சதம் * சமீர் ரிஸ்வி கலக்கல்

97 பந்தில் இரட்டை சதம் * சமீர் ரிஸ்வி கலக்கல்


ADDED : டிச 21, 2024 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வதோதரா: ஸ்டேட் டிராபி (23 வயது) லீக் போட்டியில் 97 பந்தில் 201 ரன் விளாசினார் உ.பி., அணியின் சமீர் ரிஸ்வி.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான, 'ஸ்டேட் டிராபி' ஒருநாள் போட்டித் தொடர் (23 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. வதோதராவில் நடந்த போட்டியில் திரிபுரா, உ.பி., அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உ.பி., அணி 50 ஓவரில் 405/4 ரன் குவித்தது. ஷவுரியா (51), ஆதர்ஷ் (52) உதவ, கேப்டன் சமீர் ரிஸ்வி, 97 பந்தில் 201 ரன் (20x6, 13x4) விளாசி, அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய திரிபுரா அணி, 50 ஓவரில் 253/9 ரன் மட்டும் எடுத்தது. உ.பி., அணி 152 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு போட்டியில் தமிழக அணி (328/6), சத்தீஷ்கர் அணியை (156/10), 172 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதல் வீரரா

நேற்று 97 பந்தில் 201 ரன் எடுத்தார் சமீர் ரிஸ்வி. எனினும் இது 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி என்பதால், 'லிஸ்ட் ஏ' சாதனை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

* 'லிஸ்ட் ஏ' போட்டியில், நியூசிலாந்தின் சாத் போவெஸ், 103 பந்தில் (2024, போர்டு டிராபி), இரட்டை சதம் அடித்தது முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஜெகதீசன் (தமிழகம், விஜய் ஹசாரே டிராபி, 2022), ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (2021, மார்ஷ் கோப்பை) இரண்டாவதாக (தலா 114 பந்து) உள்ளனர்.

* சர்வதேச ஒருநாள் அரங்கில் இந்தியாவின் இஷான் கிஷான் (126 பந்து, 2022, எதிர்-வங்கதேசம்) முதலிடத்தில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us