/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
எப்போது தேறுவார் சாம்சன் * எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்
/
எப்போது தேறுவார் சாம்சன் * எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்
எப்போது தேறுவார் சாம்சன் * எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்
எப்போது தேறுவார் சாம்சன் * எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்
ADDED : ஜன 26, 2026 10:58 PM

புதுடில்லி: 'வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு முன், சிறப்பான முறையில் சாம்சன் மீண்டு வர வேண்டும், என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய 'டி-20' அணியில் 11 ஆண்டுகளாக நீடித்து வருகிறார் விக்கெட் கீப்பர், பேட்டர் சஞ்சு சாம்சன் 31. இதுவரை 55 போட்டியில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 1048 ரன் எடுத்துள்ளார். நிலையற்ற பேட்டிங் காரணமாக, தொடர்ந்து குழப்பமான சூழலில் தவித்து வருகிறார்.
கடைசி 14 போட்டியில் (26, 5, 3, 1, 16, 56, 13, 39, 24, 2, 37, 10, 6, 0) ஒருமுறை மட்டும் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து தொடரில் 10, 6, 0 என ஏமாற்றினார். ஆஸ்திரேலியா (131.00), இங்கிலாந்து (118.00), நியூசிலாந்து (113.00) அணிக்கு எதிராக 'ஸ்டிரைக் ரேட்' மோசமாக உள்ளது.
இவரால் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்து 'டி-20' தொடரில் 5 முறை (26, 5, 3, 1, 16) வேகங்களிடம் விரைவில் வீழ்ந்தார். இம்முறை நியூசிலாந்தின் ஜேமிசன், ஹென்றியிடம் (2 முறை) அவுட்டானார். 130 கி.மீ., 'வேகத்தில்' பந்து வீசும் இவர்கள், 'ஸ்டம்சிற்கு' நேராக அல்லது 'லெக் மிடில்' பகுதியில் வீசுவதால் ரன் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் டபியு.வி., ராமன் கூறியது:
சாம்சனின் பேட்டிங்கில் தொழில்நுட்பம், மனதளவில் என சிறிய குறை காணப்படுகிறது. பந்தின் வேகத்திற்கு ஏற்ப, பேட் வேகத்தை மாற்றி எதிர்கொள்ள வேண்டும். இதை சரியாக செய்தால் தேறிவிடலாம்.
தற்போது மற்றொரு விக்கெட் கீப்பர், பேட்டர் இஷான் கிஷான் அணிக்கு திரும்பி மிரட்டும் நிலையில், தனது இடம் பறிபோகும் என்ற எண்ணம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் இதில் இருந்து மீண்டும் வரும் திறமை சாம்சனுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

