ADDED : ஏப் 14, 2026 11:05 PM

சிட்னி: ஆஸ்திரேலிய 'சுழல்' ஜாம்பவான் ஷேன் வார்ன். டெஸ்ட் அரங்கில் 708 விக்கெட் சாய்த்துள்ளார். 2021ல் இங்கிலாந்தில் 'தி ஹண்டிரடு' தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட போது கொரோனா தாக்கியது.
இதில் இருந்த மீண்ட இவர், 2022ல் தாய்லாந்து சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 52 வயதில் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அவரது மகன் ஜாக்சன் கூறியது:
எனது தந்தை இறப்புச் செய்தி கேட்டதும் முதலில் அரசு, அடுத்து கொரோனா, தடுப்பூசியை குற்றம் சுமத்தினேன். தந்தையின் மரணத்தில், தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது. இப்போது நினைத்தாலும் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.
நல்ல உடல் நலத்துடன் இருந்த போதும், பணி காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார். அவருக்கு இதில் விருப்பம் இல்லை. 3 முதல் 4 தடுப்பூசி செலுத்தி இருப்பார். ஏற்கனவே சில தொல்லைகள் இருந்தாலும், தடுப்பூசி எனது தந்தையின் உடல்நிலையை மோசமாக்கி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
