/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நான்கு விக்கெட் சாய்த்த தனுஷ் * தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி ரன் குவிப்பு

ADDED : அக் 30, 2025 10:39 PM

பெங்களூரு: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க 'ஏ' அணி, இந்திய 'ஏ' அணிக்கு எதிராக, இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் (தலா 4 நாள்) பங்கேற்கிறது. கடந்த மான்செஸ்டர் டெஸ்டில் (ஜூலை மாதம்), வலது கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவில் இருந்து முழுமையாக மீண்ட, விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷாப் பன்ட், இந்திய 'ஏ' அணி கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க 'ஏ' அணிக்கு ஜோர்டான் ஹெர்மான், லெசெகோ (0) ஜோடி துவக்கம் தந்தது. அடுத்து இணைந்த ஜோர்டான் (71), ஜுபைர் (66) என இருவரும் அரைசதம் அடித்தனர். கேப்டன் மார்கஸ் ஆக்கர்மன் 18 ரன் எடுத்தார். ரூபின் தன் பங்கிற்கு 54 ரன் எடுத்தார். தியன் வான் (46) கைகொடுக்க, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 299/9 ரன் எடுத்திருந்தது. ஷெப்கோ (4) அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியா சார்பில் தனுஷ் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார். மானவ் சுதர் 2, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்னுார் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.