/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சதம் விளாசினார் டோனி * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
/
சதம் விளாசினார் டோனி * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
சதம் விளாசினார் டோனி * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
சதம் விளாசினார் டோனி * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
ADDED : அக் 29, 2024 11:15 PM

சாட்டோகிராம்: இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசினார் தென் ஆப்ரிக்காவின் டோனி.
வங்கதேசம் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று சாட்டோகிராமில் துவங்கியது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
டோனி அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி, கேப்டன் மார்க்ரம் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது மார்க்ரம் (33) அவுட்டானார். பின் டோனி, திரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்தனர். இருவரும், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் கடந்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்த போது, ஸ்டப்ஸ் (106) அவுட்டானார். முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 307/2 ரன் எடுத்திருந்தது. டோனி (141), பெடிங்ஹாம் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
16 ஆண்டுக்குப் பின்
கடந்த 2000க்குப் பின் வங்கதேச மண்ணில் நடந்த டெஸ்டில், 50 ரன்னுக்கும் மேல் எடுத்த மூன்றாவது தென் ஆப்ரிக்க துவக்க வீரர் ஆனார் டோனி. 2008ல் ஸ்மித் (2 முறை), மெக்கன்சி (2008) இது போல ரன் எடுத்தனர். தவிர 16 ஆண்டுக்குப் பின் 50 ரன்னுக்கும் மேல் எடுத்த தென் ஆப்ரிக்க துவக்க வீரர் ஆனார் டோனி (141*).