/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அயர்லாந்தை வென்றது தென் ஆப்ரிக்கா
/
அயர்லாந்தை வென்றது தென் ஆப்ரிக்கா
ADDED : செப் 28, 2024 11:05 PM

அபுதாபி: முதல் 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட்டில் அயர்லாந்தை வென்றது.
தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் இரு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கின்றன. போட்டிகள் அபுதாபியில் நடக்கின்றன. முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
பாட்ரிக் 'நான்கு'
அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் (2), ராஸ் அடைர் (18) ஜோடி துவக்கம் தந்தது. டெக்டர் (16) நிலைக்கவில்லை. கேம்பெர் 36 பந்தில் 49 ரன் எடுத்தார். நெய்ல் ராக் (37), டாக்ரெல் (21) சற்று கைகொடுத்தனர். பின் வரிசை வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. அயர்லாந்து அணி 20 ஓவரில் 171/8 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்காவின் பாட்ரிக் குருகெர் 4 விக்கெட் சாய்த்தார்.
ரிக்கெள்டன் அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு ரியான் ரிக்கெள்டன், ஹென்ரிக்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி வெற்றியை வேகமாக நெருங்கியது. முதல் விக்கெட்டுக்கு 13 ஓவரில் 136 ரன் சேர்த்த போது, ஹென்ரிக்ஸ் (51) அவுட்டானார். ரிக்கெள்டன் 48 பந்தில் 76 ரன் எடுத்து திரும்பினார்.
தென் ஆப்ரிக்க அணி 17.4 ஓவரில் 174/2 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.