/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி தோல்வி * கடைசி பந்தில் அதிர்ச்சி
/
தமிழக அணி தோல்வி * கடைசி பந்தில் அதிர்ச்சி
ADDED : நவ 28, 2025 10:57 PM

ஆமதாபாத்: சையது முஷ்தாக் லீக் போட்டியில், தமிழக அணி கடைசி பந்தில் தோல்வியடைந்தது.
இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. ஆமதாபாத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் தமிழகம், டில்லி அணிகள் மோதின.
தமிழக அணிக்கு அமித் சாத்விக் (54), துஷார் ரஹேஜா (72) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சாய் சுதர்சன் (13), இஷாந்த் சர்மா 'வேகத்தில்' வெளியேறினார்.
ஷாருக்கான் (6), ஜெகதீசன் (13) ஏமாற்றினர். தமிழக அணி 20 ஓவரில் 198/7 ரன் குவித்தது. கேப்டன் வருண் சக்ரவர்த்தி (13) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் களமிறங்கிய டில்லி அணிக்கு யாஷ் துல் (71), பிரியான்ஷ் (35) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் நிதிஷ் ராணா (34) ஆறுதல் தந்தார். படோனி 41 ரன் எடுக்க, டில்லி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டன. இதில், ஹிம்மத் சிங் சிக்சர் அடிக்க, டில்லி அணி 20 ஓவரில் 203/4 ரன் எடுத்தது. தமிழக அணி 6 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
ஆயுஷ் சதம்
லக்னோவில் நடந்த ('ஏ' பிரிவு) போட்டியில் விதர்பா (192/9), மும்பை மோதின. ஆயுஷ் மாத்ரே சதம் அடிக்க, மும்பை அணி 17.5 ஓவரில் 194/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வென்றது. ஆயுஷ் (110), ஷிவம் துபே (39) அவுட்டாகாமல் இருந்தனர்.
பிரித்வி அரைசதம்
மேற்குவங்கத்தின் ஜாதவ்பூரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஐதராபாத் (191/8), மகாராஷ்டிரா மோதின. கேப்டன் பிரித்வி ஷா (66) அரைசதம் உதவ, மகாராஷ்டிரா அணி 18.4 ஓவரில் 192/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வென்றது. அர்ஷின் (89) அவுட்டாகாமல் இருந்தார்.
இளம் வீரர்
முதல் தரம், லிஸ்ட் 'ஏ', 'டி-20' என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த இளம் வீரர் ஆனார் ஆயுஷ் (18 வயது, 135 நாள்). இதற்கு முன் ரோகித் சர்மா (19 வயது, 339 நாள்) இருந்தார். உன்முக்த் சந்த் (20 வயது, இந்தியா), குயின்டன் டி காக் (20 வயது, 62 நாள், தென் ஆப்ரிக்கா) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

