
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர், 19 வயதுக்கு உட்பட்ட), துபாயில் டிசம்பர் 12-21ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது.
இதற்கான 15 பேர் கொண்ட இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஆயுஷ் மாத்ரே 18, தேர்வானார். பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். துணைக் கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, வைபவ் சூர்யவன்ஷி அணிக்கு துவக்கம் தரவுள்ளனர்.
அணி விபரம்:
ஆயுஷ் மாத்ரே, வைபவ், விஹான், வேதாந்த், அபிக்யான், ஹர்வன்ஷ், யுவ்ராஜ் கோஹில், கனிஷ்க், கிலன், நமன் புஷ்பக், தீபேஷ், ஹெனில், கிஷன், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.

