
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) தொடர் நடக்கிறது. தேனி, தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த போட்டியில் 'நடப்பு சாம்பியன்' தமிழகம், பீஹார் அணிகள் மோதுகின்றன.
முதல் இன்னிங்சில் பீஹார் அணி முதல் இன்னிங்சில் 203 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 3/0 ரன் எடுத்திருந்தது. 2வது நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. தமிழகம் முதல் இன்னிங்சில் 244/4 ரன் எடுத்து, 41 ரன் முன்னிலை பெற்றது. சதம் அடித்த குஷ் பர்தியா (134) அவுட்டாகாமல் இருந்தார்.

