sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

31 பந்தில் உர்வில் சதம் * தமிழக அணி ஏமாற்றம்

/

31 பந்தில் உர்வில் சதம் * தமிழக அணி ஏமாற்றம்

31 பந்தில் உர்வில் சதம் * தமிழக அணி ஏமாற்றம்

31 பந்தில் உர்வில் சதம் * தமிழக அணி ஏமாற்றம்


ADDED : நவ 26, 2025 10:56 PM

Google News

ADDED : நவ 26, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத், சர்வீசஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 182/9 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டனாக களமிறங்கிய உர்வில் படேல், 31 பந்தில் சதம் அடிக்க வெற்றி எளிதானது. குஜராத் அணி 12.3 ஓவரில் 183/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. உர்வில் (37 பந்து, 119 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.

தமிழகம் தோல்வி

ஆமதாபாத்தில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் மோதின. தமிழக அணிக்கு ஜெகதீசன் (29), சோனு (43) கைகொடுக்க, 20 ஓவரில் 169/8 ரன் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு தீபக் ஹூடா (36 பந்து, 76 ரன்) உதவ, 16.3 ஓவரில் 170/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் உத்தரகாண்ட் (197/5) அணி இலக்கை துரத்தியது கர்நாடகா. கடைசி 2 பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில், பிரவீன் துபே (38 ரன்) சிக்சர் அடிக்க, கர்நாடக அணி (198/5) 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

லக்னோவில் நடந்த போட்டியில் மும்பை, ரயில்வேஸ் மோதின. ரயில்வேஸ் (158/5) இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு சூர்யகுமார் (47), ரகானே (62) கைகொடுக்க, 15.5 ஓவரில், 159/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us