/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
34 பந்தில் கிரண் சதம் * பெண்கள் 'டி-20' ல் புதிய சாதனை
/
34 பந்தில் கிரண் சதம் * பெண்கள் 'டி-20' ல் புதிய சாதனை
34 பந்தில் கிரண் சதம் * பெண்கள் 'டி-20' ல் புதிய சாதனை
34 பந்தில் கிரண் சதம் * பெண்கள் 'டி-20' ல் புதிய சாதனை
ADDED : அக் 18, 2025 10:30 PM

நாக்பூர்: பெண்கள் 'டி-20'ல் 34 பந்தில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் கிரண் நவ்கிரே.
இந்தியாவில் சீனியர் பெண்கள் அணிகளுக்கான 'டி-20' டிராபி எலைட் தொடர் நடக்கிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 10 ஓவரில் 110/6 ரன் எடுத்தது. எளிய இலக்கைத் துரத்திய மகாராஷ்டிரா அணிக்கு ஈஷ்வரி (1), கிரண் நவ்கிரே ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பின் ரன் மழை பொழிந்த கிரண், 34 பந்தில் சதம் அடித்தார்.
மகாராஷ்டிரா அணி 8 ஓவரில் 113/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கிரண் (106 ரன், 35 பந்து), மாக்ரே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
புதிய சாதனை
இதையடுத்து பெண்கள் 'டி-20'ல் அதிவேக சதம் அடித்த வீராங்கனை என புதிய சாதனை படைத்தார் கிரண் (34 பந்து). முன்னதாக 2021ல் நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் தொடரில் வெலிங்டன் அணியின் சோபி, 35 பந்தில் சதம் (எதிர்-ஒடாகோ) அடித்து இருந்தார். தவிர, பெண்கள் 'டி-20'ல் சதம் அடித்த வீராங்கனைகளில் 300க்கும் மேல் 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ளவர் ஆனார் கிரண் (302.86).
தவிர, 2022 'டி-20' தொடரில் நாகலாந்து அணிக்காக 35 சிக்சர் அடித்தார். இத்தொடரில் ஆந்திர பிரதேசத்திற்கு எதிராக 76 பந்தில் 162 ரன் எடுத்த கிரண், பெண்கள் 'டி-20'ல் ஒரு போட்டியில் 150 ரன்னுக்கும் மேல் எடுத்த முதல் இந்திய வீராங்கனை ஆக திகழ்கிறார்.